ஈரோடு கதிர் எனும் கதிர்வேலு பழனிசாமி

சிறு அறிமுகம்

பதிமூன்று வருடங்களாக பல்வேறு நிறுவனங்களில் மனித வள மேம்பாட்டு தன்முனை மேம்பாடு,
ஆளுமை முன்னேற்ற பயிற்றுனர், பேச்சாளர், எழுத்தாளர், சாப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் மென்திறன் பயிற்றுனர் சமூக ஆர்வலர்.பல்வேறு பத்திரிக்கைகளில் அதாவது குமுதம், விகடன், குங்குமம், கல்கி, நம் தோழி, செல்லமே இன்னும் பலவேறு இதழ்கள், செய்திதாள்களில் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வந்துள்ளன.

இவரின் ஒரு கவிதை கல்லூரி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக அவர்களின் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. கிளையிலிருந்து வேர் வரை புத்தகம் வெளியிட்டுள்ளார். இன்னும் பல புத்தகங்கள் வரிசையில் வெளியிட போகிறார். மனித மென் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதில் சிறந்தவர்.

சிறப்புகள்

சிங்கப்பூரின் வாசக சாலை விழாவில் சிறப்பு விருந்தினர், பேச்சாளார். யாழ்ப்பாணம், மட்ட களப்பு, கொழும்பு போன்ற நகரங்களில் சிறப்பு பேச்சாளராக உரை நிகழ்த்தி இருக்கிறார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், ரயில்வே துறை, ஜேசிஸ், லயன்ஸ், ரோட்டரி சங்க விழாக்கள், இலக்கிய கூட்டங்கள், விவாத மேடைகள் என பேச்சாளராக மேடையேறிய நிகழ்வுகள் முந்நூறுக்கும் மேல்..

ஒரு பயிற்றுனராக

மென், ஆளுமை வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்றுனராக Lanka Orix Leasing Company, LOLC, Micro credit, Commercial Leasing Company and Brac Lanka போன்ற பலவேறு நிறுவனங்களில்,
ஸ்ரீலங்காவின் பல்வேறு நகரங்களில் பயிற்சி பட்டறைகள். புகழ்பெற்ற நிறுவனமான Hewlett Packard Inc. ல் ஆளுமை திறன், அணி மேம்பாடு (team building), வேலைக்கும், வாழ்வுக்கும் சமநிலை காப்பது, மென் திறன் வளர்த்தல், வேலை திறன் வளர்த்தல் என்று தொடர்ந்து பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறார். சென்னை, காவலர் பயிற்சி அகடமியில் women police force wing முழுமைக்கும் மென் திறன், ஆளுமை திறன் பயிற்சியாளாரக பணியாற்றி உள்ளார். இதுவரை பல்வேறு துறைகளில், பல்வேறு நகரங்கள், சங்கங்கள், நிறுவனங்களில் பயிற்றுனாராக பட்டறை நிகழ்வுகள் மட்டும் முன்னூறுக்கும் அதிகம்.

எழுத்தாளர்

இணையம் வழியாக வந்து தனி பாணியில் எழுதி உலகம் முழுக்க உள்ள வாசகர்களால் ஈர்க்கப்பட்டவர். கசியும் மௌனம் என்ற வலைப்பக்கம் மூலமும், பல்வேறு பத்திரிக்கைகள் மூலமும் இவர் எழுதிய கட்டுரைகள், விமர்சனங்கள், சிறு பதிவுகள், கதைகள் ஆயிரகணக்கில் உள்ளன. கவிதைகள் 650 க்கும் மேல் எழுதி இருக்கிறார். எழுதிக்கொண்டும் இருக்கிறார். நம் தோழியில் தொடர் எழுதிக்கொண்டு வருகிறார். தற்சமயம் எழுதி பிரபல பத்திரிக்கை குங்குமம் வரும் உறவெனும் தொடர்கதை மனதை தொட்டு செல்லும் எழுத்தால் பலரை சென்று அடைந்து உள்ளது.

சமூக ஆர்வலராக

2002 ம ஆண்டில் இந்தியன் ஜூனியர் சேம்பரில் தலைமை பதவியில் இருந்து இருக்கிறார். பல்வேறு சங்க செயல்பாடுகளில் தொடர்ந்த பங்கேற்பு. சங்கம் மூலம் கண்தானம் விழிப்புணர்வை பல்வேறு தளங்களுக்கு கொண்டு சென்றது. ரத்ததானம் முகாம்களை ஊக்குவித்தல் மற்றும் பல வருடங்களாக அதை தானும் தொடர்வது.

மீடியாக்களில்

ஜெயா டதொலைகாட்சி காலை மலர் நிகழ்சி.
நியூஸ் செவன் ல் வரவேற்பறை நிகழ்ச்சி.
தொடர் நிகழ்வாக தினமும் ஸ்ரீலங்கா சக்தி டிவி நிகழ்ச்சியான குட்மார்னிங் ஸ்ரீலங்காவில்
”சிந்தனை துளிகள்” நிகழ்ச்சி.
பொதிகை டிவி யில் கொஞ்சம் கவிதை , கோணம் தேநீர் நிகழ்ச்சி.
கோவை வானொலியில் கவிதைகள் வாசிக்கப்பட்ட நிகழ்வு.
மக்கள் தொலைகாட்சி. , புதிய தலைமுறை செய்தி நிகழ்வுகளில் நேர்காணல்.
வெற்றி எம். எம் ஸ்ரீலங்காவில் உரை.
சூரியன் எப்.எம் ஸ்ரீலங்காவில் நேர்காணல்.
சிங்கப்பூர், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் சிறு நிகழ்வுகள்.

Author

ஈரோடு கதிர்

Recent Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *