கீச்சுகள் தொகுப்பு 62

எழுதியது ஈரோடு கதிர்

 

உறக்கம் திருடும் குளிர் தோய்ந்த நடுநிசிக்கு என்ன பெரிதாய் தேவையிருக்கப் போகிறது ஏதோ ஒரு நிறைவின் கொண்டாட்டமோ குறைவின் பசியோ தவிர்த்து

தை மாத விடியலில் வந்திருக்கும் மழைத்தூறல் நம்பும்படியாக இல்லை என்பதைவிட நல்லதுக்கு அல்ல என்று மட்டும் புரிகிறது!

”நான் சொல்றத புரிஞ்சுக்க, சரியா?”என நாம் சொல்லும்போதே புரிந்துகொள்ளவே இயலாத அண்டவெளிக்கு அவர்கள் சென்றுவிட்டனர் என்பதையும் புரிந்துகொள்வோம்

காணும் ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் ‘அது அந்தக் குழந்தையின் முகம்’ என ஒப்புக்கொள்ளாமல் யாரோ ஒருவரைத் தேடி, யாரோ போல் இருப்பதாய் சொல்கிறோம்!

இப்பவே கேலண்டரை எடுத்துப் பார்த்துட்டு ”அடச்சே தீவாளி சனிக்கிழமை வருது”னு ஸ்கூலுக்கு போற புள்ளைய என்ன சொல்றது!

கொம்பில்லா கலப்பின மாடுகளுக்கு பூ, பொட்டு வச்சு பொங்கல் கொண்டாடுறது, எமி ஜாக்சனுக்கு பாவாடை தாவணி போட்டு தமிழ்ப்பொண்ணா வேசம் கட்டுன மாதிரி

மாடுகள் ஏதுமில்லை எஞ்சியிருக்கும் அதன் வாசனையோடு வந்து குவியும் கிராஃபிக்ஸ் மாடுகளின் வாழ்த்துகளோடுதான்… இந்த நாளைக் கடக்க வேண்டும்!

வேட்டி தினம் என்பது அன்றைக்கு மட்டும் வேட்டி கட்டி போட்டோ போடுவதற்காக அல்ல… அவ்வப்போது வேட்டி கட்ட வேண்டும் என நினைவூட்டுவதற்காக!

வேண்டாம், முடியாது என்பதை வேண்டாம், முடியாது என நயமாகச் சொல்வதுதான் இருவருக்கும் நல்லது!

பிரியத்தின் முத்தம் கதகதப்பாகவும், கோபத்தின் முத்தம் குளிர் சூடியதாயும்!

50 பைசா காசும் அருங்காட்சியகத்துக்குப் போயிடுச்சா? மார்வாடி டீக் கடைக்காரன் 1 ரூ கேட்டப்போ 2 அம்பது பைசா கொடுத்ததுக்கு அல்பமா பாக்குறான்!

புது வருசத்துக்கு எதும் கெட்ட பழக்கத்தை விடணும் நினைச்சா வருசா வருசம் சபதம் எடுக்கிற கெட்ட பழக்கத்தை விடுங்க! 🙂

”இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை!” ”So..!?” ”அதனுடைய நீள, அகலத்துக்கும் மகிழ்ச்சியா இருந்துடணும்”

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்

ஒரு குழந்தையின் வார்ப்பு அந்தக் குழந்தைக்காக மட்டுமே செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. இன்னொரு குழந்தை என்பது இன்னொன்றுதான்.

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த உலகத்தை சன்னல் வழியே மட்டும் பார்ப்பீர்கள்!

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வயதாகவில்லை என மனம் நினைப்பது பிரியமன்றி வேறென்ன!?

பொங்கல், கிருஸ்துமஸ், தீபாவளியை முன்கூட்டியே கொண்டாடும் (கல்வி) நிறுவனங்கள் ஏன் விவசாயிகள் தினத்தை அப்படியாகக் கொண்டாடுவதில்லை

இருக்கும் பதில்களுக்கு கேள்விகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

கிளைகளில் வைத்தியம் செய்கின்றோம்… சிக்கல் வேர்களில் இருக்கின்றது!

டிசம்பர்ல குளிக்கிறவன் வீரன்! அதுவும் பச்சத் தண்ணில குளிக்கிறவன் மாவீரன்!

பல்வேறு கதாபாத்திரங்களை வாழ்க்கை வழங்கினாலும், அதில் பிடித்ததாக நினைத்துக்கொள்வதை மட்டுமே சலித்துப்போகுமளவிற்கு திரும்பத்திரும்ப ஏற்கிறோம்.

கிடைத்தால் இறக்கைகளை பிய்த்து, கால்களை முறித்து வீசும் அளவிற்கான வன்மத்தை கொசுக்கள் ஏற்படுத்தியிருக்கின்றன!

கேரிபேக் வேணாமென மறுக்கையில் கருவம் ஓங்கி வளருதடி!

வெளியேறும் வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!

இந்த ”வரலாறு காணாத”ங்கிற வார்த்தையை நிறுத்தச்சொல்லனும். வரலாறு அப்படியே எதையாச்சும் கண்டிருந்தாலும், இப்ப பிரச்சனை இப்போதைக்கு பெருசுதான்

‘வாழ்ந்திட’ தினம்தோறும் கற்றுக் கொள்வதும், மறப்பதும் அவசியமென்பதே ஆகச்சிறந்த சுவாரஸ்யம்தான்!

If any of this sounds confusing, I do not blame you it can be a my homework bit complex
Author

kathir

Recent Posts