பூக்கள் பூக்கும் தருணம்

 

நீயும் படிக்கவில்லை
நானும் படிக்கவில்லை
விரல் நுனி உரசலில்
வேதியல் மாற்றம் நிகழுமென்பதை

நோக்கும் நொடியிலெல்லாம்
புது மலராய் பூத்து நிற்கிறாய்
மடி சாய்கையில் மட்டும்
மல்லிகைச் சரமாய் வாடுகிறாய்…

வார்த்தைகளைத் தேடுகிறேன்
உன் இதழ்களில்
வரிகளைத் தருகிறாய்
விழியசைவில்…

அன்பு ஆர்பரிக்கும் தருணங்களில்
அணையிலிட்டுத் தேக்கி
திகட்டிய அன்பைக் கொஞ்சம்
ஆவியாக்கி ஊடல் பூணுகிறோம்

அன்பு கனத்த கரு மேகம்
கிழிந்து பொழிகிறது
புத்தம் புது அன்பு
புதுவேகம் பூணுகிறது

கற்ற மொழிகளெல்லாம் தீர்ந்து
கரைந்த மௌனப் பொழுதில்
உடலும் ஒரு மொழி என்பதை
உன்னை வாசிக்கையில் அறிகிறேன்

மௌனங்களின் வரிகளை வாசிக்கவும்
கற்பனையில் வாசனையை நுகரவும்
கனவுகளில் வர்ணங்களைக் காணவும்
கற்கிறேன் காற்றாய் உனை சுவாசிக்கையில்

In cheap essay writing service contrast, khan academy’s method, using archived video, is almost infinitely scalable
Author

kathir

Recent Posts