தருணங்களின் தவிப்பு

 

அழிக்க மறந்திருந்த

அகாலமான நண்பனின்
அலைபேசி எண்ணை
அழிக்கும் தினத்தில்
இன்னொருமுறை
செத்துப்போகிறான்.

***

சிலந்தியின் ஓட்டமும்
உழைப்பும் கனவும்
ஒற்றை நொடியில்
கலைந்து போகிறது
ஒட்டடையாய்
கண்ணில் படும்போது

***

கடிக்கத் தவிக்கும்
கொசுவை
அடிக்கும் கையில்
சிதறிப்படிகிறது
வேறொருவரின்
இரத்தம்

***

குதூகல குறும்புகளையும்
பட்டாம்பூச்சி படபடப்பையும்

பள்ளி கிளம்பும் பிள்ளை
தன் பையோடு
சுமந்துபோகிறது
வீட்டை வெறுமையாக்கி!
***

Everyone says to use itunes but I already have a huge itunes library for my http://topspying.com old i-pod that i’ve been using for years
Author

kathir

Recent Posts