கீச்சுகள்

கீச்சுகள் – 41

எழுதியது ஈரோடு கதிர்

 

கோபத்துல கத்திட்டு, பக்கத்தில இருக்கிறவங்ககிட்ட கோபப்பட்டு கத்துனா நமக்குத்தாகெடுதல்னு அட்வைஸ் பண்ற அல்ப சுகம் இருக்கே… அப்பப்பா செம 🙂

உங்கள் நம்பிக்கையின்மையை அவர்கள் கேள்விக்குட்படுத்தாத போதும், அவர்களின்நம்பிக்கையை நீங்கள் கேள்விக்குட்படுத்துவதை நம்புகிறீர்களா?

புதிய பாராட்டும் மகிழ்ச்சியும் முந்தைய மகிழ்ச்சியை மறக்கடித்து விடுகின்றன.அவமானமும் துக்கமும் மட்டும் முந்தையவைகளோடு இணைந்துவிடுகின்றன.

நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லைதான், ஆனாலும் நிரூபித்துவிட மனதுதவிக்கிறது!

அவசியப்படாத தருணத்தில் ஓய்வெடுத்துப் பாருங்கள். அப்போது தெரியும் ஓய்வு எத்தனைபெரிய நரகமென்று!

 தினமும் இருக்கும் 24மணி நேரத்தில், குறைந்தபட்சம் ஒருபக்க அளவுகூட பேனாவினால்எழுதாமல் அப்படி என்னதான் வெட்டி முறிக்கிறேன்னு ஒன்னும் புரியல!

மௌனமாய் இருப்பதை, ”சொன்னாத்தானே தெரியும்!” என்கிறார்கள் 🙂 #ஙே

சில கதவுகள் பூட்டியிருப்பது போலவே தென்படுகின்றன. அழுத்தித் தள்ளினால்தான்தெரிகிறது அவை பூட்டப்படவில்லையென!

முத்தங்களுக்கு அனுமதி கிடையாது ஆனால்… நீ அத்து மீறலாம்!

அதோ அந்த மூலையிலிருந்து அரை நிலா யாரையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.ஒருவேளை உங்களையோ!?

பல வருடங்கள் தீனிபோட்டு தடவித்தடவி வளர்த்த ’தொப்பை’யை சில வாரங்களில்கரைக்க நினைக்கிறதுக்குப் பேருதான் ”பேராசைப்பிணாத்தல்போபியா” வியாதி!

நம்மூர்லயும் ஒரு ”அமேசான் காடு” இருந்திருந்தா பல பிரச்சனைகளிலிருந்துதப்பிச்சிருக்கலாம் குறிப்பா சாவடிக்கிற இந்த டிவி விளம்பரங்களிலிருந்து!

எதை ’நிரூபிக்க’ இந்த வாழ்க்கை!?

மனசுக்கு ஒரு Mute பட்டன் இருந்திருக்கலாம்!

ட்விட்டர் மாதிரி 140 எழுத்துகதானு ஃபேஸ்புக்லயும் வெச்சிருந்தா, ஃபேஸ்புக்ல இத்தனையுத்தங்கள் நடந்திருக்காதுனு தோணுது!

”சரி try பண்றேன்”என்பதிலிருக்கும் ’try’க்கு நிகரான தப்பித்தல், பொய் வேறெதும் இருக்குமாஎன்பதைக் கண்டுபிடிக்க நான் try பண்ணிட்டிருக்கேன்!

குளிர்ந்து கிடக்கும் இந்த விடியலை, கதகதப்பாய் கட்டியணைத்து முன்னுச்சியில் ஒருமுத்தமிட்டாலலென்ன!

இப்போது கவ்வியிருக்கும் இந்த உணர்வு, ஒரு உறக்கத்திற்குப்பின் மாறிடச் சாத்தியமுண்டு.மாறிடச் சாத்தியமுடைய உணர்வுக்கா இத்தனை போராட்டம்?

நமக்கு IRCTCகூட நேரடிதொடர்பு இருக்குமோ? யாருக்கு Tatkal போட்டாலும் கிடைக்குது.நம்ம பேரு ராசிக்கு ஆடி போயி ஆவணி போயி புரட்டாசி வந்தும் ம்ஹூம்

I wouldn’t mind a little income from my second cheap term papers for sale novel, but just to share the story with other human beings is a reward in itself
Author

kathir

Recent Posts