கீச்சுகள்

கீச்சுகள் – 38

எழுதியது ஈரோடு கதிர்

 

சாமி பார்க்க லேட்டாகும் என ”சிறப்பு தரிசனம்” எனும் பெயரில் கௌரவமாக காசுபிடுங்குவதற்குப் பெயரும் லஞ்சம் தான்!

*

எங்கிருந்தோ எம்மீது சொட்டும் இருசொட்டுப் பனித்துளிகள் பிரியத்துக்குரிய விழிகள்நனைத்ததாக இருக்கட்டுமே!

*

கடந்து போகும் கணத்தின் மீது உமிழ்ந்தேன், அது என் முகத்தில் தெறித்தது. முத்தமிட்டேன்அது என் இதழ்களில் பதிந்தது.

*

இந்த ”அவதானிப்பு”ங்கிற வார்த்தையில இருக்கிற ”அவ(ள்)” யாருங்கிறத இதுவரைக்கும்ஒருத்தராச்சும் கண்டுபிடிச்சீங்ளா?

*

எல்லாச் சூழல்களிலும் அணியவியலாத, நம் குழந்தைகளைக்கூட எட்ட நிறுத்திஅணுகவைக்கும் ஆடைகளுக்குத்தான் பெரும்பாலும் அதிக விலை தருகிறோம்

*

’சீட்’ நிரம்பாத என்ஜினியரிங் காலேஜ், ’வீட்டுமனை’ விற்பனையாகாத ரியல் எஸ்டேட்கம்பெனி இடையே லோக்கல் டிவி விளம்பரங்களில் கடும் போட்டி!

*

போற்றும் மதத்தைவிட நம்பும் கடவுளை விட மெச்சும் தலைமையைவிட… வெயிலும்,மழையும் மனிதனுக்கு எளிதாகப் பாடம் கற்பித்து விடுகிறது!

*

காமம் ஒரு செய்யுள் போலே
சிலர் புரிந்து ரசிக்கிறார்கள்
சிலர் மனப்பாடம் செய்கிறார்கள்!

*

லெமன் ஜூஸை ஸ்பூன்ல அள்ளிக் குடிக்குது ஒரு பாப்பா. ஏன்னு கேட்டா, அப்போதான்மெதுவா தீருமாம்! 🙂

*

அழுக்கு என்பது எல்லா இடங்களிலும் குறையான ஒன்றல்ல, சுத்தத்தின் விளைவாகவும்பாவிக்கப்பட வேண்டிய ஒன்று!

*

எங்க ஊருக்கு மேலே தப்பித்தவறி வர்ற மேகத்தையும், அக்கம் பக்கத்துல இருக்கிற யாரோகொள்ளையடிச்சிடுறாங்கனு நினைக்கிறேன்.

*

புதிதாய்ச் சொல்ல வேறொன்றும் இல்லை வார்த்தைதான் ஆயுதம் வார்த்தைதான் மருந்து!

*

ஒன்றும் சிரமமில்லை சற்றே கை உயர்த்துங்கள் பக்கத்தில் வரும் மேகத்தை பற்றியிழுத்துபரிசளித்து விடலாம்.

*

மரத்தை வெட்டி வேர்கள் வரைத் தோண்டிய வெறுமை நிரம்பிய இடத்தைப் பார்க்கையில்இடுகாடு ஒன்று மனதில் நிரம்பத் தொடங்குகிறது!

*

கோழிகளுக்கு ’லாபநட்ட’ கணக்கு தெரிவதில்லை, அதனாலோ என்னவோ அவைஒருபோதும் அழுகிய முட்டைகளை இடுவதில்லை.

*

மௌனம் சேகரித்தல் இனிது
சேகரித்ததை சிதறடித்தல் அதனினும்…

*

எல்லோரும் நன்றாக அறிவார்கள், அவர்கள் பார்க்க / வாசிக்க / எழுத விரும்பாத சிலபக்கங்களும் அவர்களின் வாழ்க்கைப் புத்தகத்தில் உண்டென!

*

ஒற்றைச் சொட்டில் நிரம்புதலும்

பெருமழையில் காய்தலும்
காதலின் விதி.

*

சில மௌனங்கள் மிகவும் வலிமையானது…. அதைக் கேடயமாகப்பிரயோகிக்கிறவனுக்குதான் அதன் முழு வலிமை தெரியும்!

*

காமராஜர் குறித்து எது படித்தாலும் ஒரு கணம் மனசு குளிர்கிறது, கனக்கிறது, நெகிழ்கிறது,தளும்புகிறது. உச்சமாய் கண்களில் கூடுதல் ஈரம் படிகிறது

*

சார்ஜரை போன்ல கனெக்ட் பண்ணினா மட்டும் சார்ஜ் ஆகாது. சார்ஜரை ப்ளக்லபோட்டிருக்கனும், அப்புறம் ஸ்விட்ச் போட்டிருக்கனும் #மிடில_கண்டுபிடிப்பு

*

”வளர்த்த கெடா மார்ல பாயுது”னு சொல்ற ஆடு மேய்ப்பர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி“வெட்டுறதுக்குத்தானே நீங்களும் நீவிநீவி வளர்த்துறீங்க”

*

கவலைகளற்ற ஒரு மனிதனைச் சந்தித்து விடமுடியவில்லை என்பதும் நம் கவலைகளில்ஒன்றாய் இருக்கின்றது # ஆமாம்..சிலது தேவையில்லாத ஆணிதான் 🙂

*

நீங்கள் நாத்திகராகவே இருந்தாக்கூட IRCTCயில் தட்கால் போடும்போதுஉங்களையுமறியாமல் ’கடவுளே டிக்கெட் கிடைச்சுடனும்’னு நினைச்சுடுவீங்க!

*

ஒன்றை ”அவரவர் போக்கில், அவரவர் புரிந்துகொள்ள” அனுமதிப்பதைத்தான் ஆகக்கடும்தோல்வியாக மனம் நினைக்கிறது!

*

முதல் ”ஐ லவ் யூ” சொன்ன சூழலை நினைவு வைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் கடைசி“ஐ லவ் யூ” சொல்லப்போகும் சூழல் தெரியாததுதான் காதலின் விந்தை!

*

குருவாக தங்களைக் கற்பனை செய்துகொள்பவர்களுக்கான முதல்ச் சிக்கல், அவரின்சிஷ்யர்கள் எனப்படுபவர்கள் ’சிஷ்யன்’ என ஒருபோதும் உணராததுதான்!

*

நிகழ்வுகளை இன்னும் சற்றே பொறுமையாக எதிர்கொள்ள வேண்டியதுதான் அவசரத்தேவையாக இருக்கின்றது.

*

பகிர்கையில் அன்பு பனித்துளியளவுதான்…
உணர்கையில் மட்டும் வெடிகுண்டாய்!

*

குழந்தைகளின் முத்தத்திற்கு விலை நிர்ணயிக்க, இன்னும் காசு அச்சடிக்கப்படவில்லை!

*

அணைகட்ட, வாய்க்கால் வெட்ட துப்புக்கெட்ட அரசு, எவரோ வெட்டிய வாய்க்காலுக்குகான்கிரீட் சமாதி அமைக்கிறது. விவசாயிகளை வேரறுக்க இது போதுமே 🙁

*

நீங்கள் புன்னகையைச் சிதறவிடுங்கள் தேவையுணர்ந்தோர் ஏந்திக்கொள்வர் 🙂

*

பல இடங்களில் இசை பாடல் வரிகளையும், சில இடங்களில் பாட்ல் வரிகள் இசையையும்கருணையின்றி கொலை செய்துவிடுகின்றன!

*

நாம் மீறுகையில் தவிர்க்க முடியாததாகவும், மற்றவர்கள் மீறுகையில்தண்டனைக்குரியதாகவும் தெரிகின்றவைகள்தான் விதிகள், சட்டங்கள்!

*

”பிளாஸ்டிக்” தழுவாத, உரசாத தண்ணீரைக் குடிக்கும் வாய்ப்பற்ற நிலையில் வாழ்கிறோம்! 🙁

*

2Hrs லேட்டாகும்னு கூடச்சொல்லுங்க, 120 நிமிசம் வெயிட் பண்ணித் தொலைக்கிறோம்.ஆனா மூனே நிமிசத்துல வந்துடுறேனு முக்கா மணி நேரம் படுத்தாதீங்க!

*

”தெரியாது”கள் எனப்படுபவை….
சில சமயம் சிறைக்கம்பிகள்,
பல சமயம் சிறகுகள்!

*

 

காலையில் எழுந்திருப்பற்கு மனதில் ’அலாரம்’ அடிக்கிறதோ இல்லையோ, 11மணியாச்சுன்னா டீ-க்கு மட்டும் ’அலாரம்’ கூட இல்லை ’சங்கே’ முழங்குகிறது.

எல்லாவற்றையும் சந்தேகிப்பவன் இறுதியாய் ஒரு நாள் சந்தேகத்தையும் சந்தேகிப்பான்!

Artikel lesen entwicklungsländer begriffe und differenzierungen die entwicklungsländer sind eine nicht einheitlich definierte gruppe von ländern, die im vergleich zu den
Author

kathir

Recent Posts