கீச்சுகள்

கீச்சுகள் – 30

எழுதியது ஈரோடு கதிர்

 

கடந்த காலம் நினைவில் மிதக்கட்டும், எதிர்காலம் நோக்கி நீந்துவோம்!

–                  

தங்கம் கிராமுக்கு 8 ரூபா இறங்கினதையுமா ”தங்கம் விலை வீழ்ச்சி”னு ஃப்ளாஸ் நீயூஸ்போடுவீங்க. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையாப்பா?

–                     

”ஒரு கட்டுரை எழுதனும், ஆனா எங்க ஆரம்பிச்சு எங்க முடிக்கிறதுனு தெரியலை”னுபுலம்பின ஒரு எழுத்தாளர்கிட்டே….

’கட்டுரையோட முதல் வார்த்தையில தொடங்கி, கடைசி வார்த்தையில் முடிங்க”னுசொன்னது ஒரு குத்தமா…. 

அதுக்காக போனை லொடக்னு வைக்கனுமா?

ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு குழந்தையிடம் கண்டுவிடமுடிகிறது 

–           

தமிழ் பண்பாட்டில் காதலே இல்லை – ’விஞ்ஞானி’ ராமதாஸ் # காமத்துப் பால் எழுதினதிருவள்ளுவர் மேல ஒரு அவதூறு வழக்குப்போடு தலைவா?

–                     

ஃபேஸ்புக் என்பதை முகநூல் என மாற்றுவது மொழிப்பற்று அல்ல… மொழி வெறி. ”சோறு”என்பதை ’ரைஸ் / ஒயிட் ரைஸ்’ என மாற்றாமல் இருப்பதே மொழி ஆளுமை!

–                     

டிவி ரியல் எஸ்டேட் விளம்பரத்துல வர்ற பக்கிங்களுக்கு அங்கேயே 6×2-ல இடம்ஒதுக்கிடுங்க. இதுக பேசுற பொய்யை பார்க்கும்போது வயிறு எரியுது 🙁

எல்லாரிடமும் நிறைய இருக்கின்றன சொல்லவும், தவிர்க்கவும்!

–                     

படிக்காதவனைவிட படித்தவன் நல்லா சிந்திப்பானு ஏன் எதிர்பார்க்கனும். படித்தவன்படித்தவைகளில் மட்டும் சிந்திக்கலாம், படிக்காதவனுக்கு எல்லை இல்லை

–                     

புதிதாய் ஒரு உலகம் உருவாக்கி, அதற்குள் தொலைந்துபோக எல்லாருக்கும் ஆசைதான்.

–                     

வாசிப்பவர்களைவிட கவிஞர்கள் அதிகம் இருப்பது போலவே, பார்வையாளர்களைவிடஅதிகமாக செய்தி தொலைக்காட்சிகள் # தமிழ்ச் சூழல்

–                     

அன்புச் சுத்தியலின் அடியில் எல்லாம் தகர்கிறது!

–                     

”தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்” எனும் நம்பிக்கை(!) பல இடங்களில் இருந்தால்நல்லதென்றே தோன்றுகிறது!

–                     

மௌனத்திற்குள் புதையும் சொற்கள் சில நேரத்தில் உரமாகவும், பல நேரத்தில்விதைகளாவும் மாறிவிடுகின்றன.

–                     

பனங்காட்டு நரி ”சலசலப்புக்கு அஞ்சுமா அஞ்சாதா” என்பதை எந்தப் பனங்காட்டு நரியிடம்நம்மாளுக கேட்டாங்கனே தெரியல!

–                     

பன்றிகளின் ”உணவு” பன்றிகளுக்கு இழிவானதாக இருக்க முடியாது!

–                     

நண்பனிடம் நீண்ட நாட்கள் கழித்து வாய் வலிக்கப் பேசினேன், அவன் காது வலிப்பதுகுறித்து கவலையற்று. கரண்ட் இல்லை, காதில் வடிந்த இரத்தம் தெரியல

பாசமோ, பாதுகாப்போ தாராளமா என்னைய அண்ணானு கூப்பிட்டுக்குங்க, ஆனா பத்துவயசு அதிகம் இருந்துட்டு அண்ணானு கூப்பிடாதீங்க அக்காக்களே!

நோயைவிட நோய் குறித்த அச்சம் மனித குலத்தை ஆட்டிப்படைக்கிறது # வளர்ச்சி Vsவீக்கம்

உலகம் அழிந்தால் சாவது குறித்து பயமில்லை என்போருக்கு சொல்ல விரும்புவது ”சாவுகுறித்து பயமில்லையென்றால் நீங்கள் எப்போதே இறந்திருப்பீர்கள்”

உலகின் ஆகக்கொடும் விளம்பரம், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் பதியப்படும்பெயர்கள்!

கடந்து வந்திருக்கிறேன். கடந்து போக வேண்டும்!

எல்லா வம்பு தும்புகளுமே ”நாம் செய்யவேண்டிய நம் வேலைகளை விட்டுவிட்டு நாமேஇழுத்துப் போட்டுக்கொள்வது” எனும் ரகசியம் தாமதமாகவே புரிவது ஏன்?

–                      

 

எல்லாத் தவறுகளையும் சரி செய்ய ”ஒரு சரி” போதுமானதாக இல்லை. எல்லாசரிகளையும் தவறுகளாக்கிட ”ஒரு தவறு” போதுமானதாக இருக்கின்றது!

–                     

பெரும் முயற்சியெடுத்து படிக்கும் பாடங்களை விட, சட்டென ஒரு நிகழ்வு கற்றுத்தரும்பாடம் ஒருபோதும் மறப்பதில்லை!

–                     

மலம் கிடந்தால் ”ஓவர் சீன் போட்டு” முகம் சுழித்துப் போவோர் உடலுக்குள்ளும் கொஞ்சம்மலம் இருக்கிறது என்பது ஏனோ புரிவதேயில்லை!

–                     

முதல்நாளே படம் பாத்து (முக்கால்வாசிக்கு) மூக்கு உடைபடுற தியாகிகளுக்கு, தேறுறபடத்தை ஆறஅமர பாக்குற சோம்பேறிகள் நன்றிக் கடன்பட்டுள்ளோம்

–                     

”நான் வாதம் செய்யல, விவாதம் தான் செய்றே”னு சொல்லிட்டு நம் கருத்தை முன்வைத்து வாதத்தை முன்னெடுத்துச் செல்வது எளிதாக இருக்கின்றது.

–                     

எல்லாவற்றையும் ”சொல்லித்தான்” புரியவைக்க வேண்டும், ஈடுசெய்ய வேண்டும்என்பதில்லை.

–                     

நிலாவில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா திட்டம் # அப்போ, இனிமே பாட்டி ’மசால்வடை’ சுடுறதுக்கு சிரமப்பட வேண்டியதில்லை!

–                     

7 கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை: மத்திய அரசு # ஏழரைக் கோடி கடையில”ஆட்கள் தேவை”னு போர்டும் போட்டிருக்கான்.

–                     

”பெற்றோர் இருக்க பிள்ளை இறந்த சோகம்” குறித்து அருகிலிருக்கும் இருள் அறையில்மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிலர் தங்கள் ஆற்றாமைகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொருவரையும் குரல்களின் மூலம் நானே ஏதோ வடிவம் சமைக்கிறேன். ஏதேதோநினைவுகளை மீட்டு எமனைச் சபிக்க இடைவிடாது தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்! 🙁

                     

பின் இரவின் மொட்டைமாடித் தனிமையில் ஏதோ ஒரு கைபேசியிலிருந்து ஏற்றஇறக்கமாய் காற்றில் மிதந்து வரும் ”மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்”உணர்த்துகிறது சொர்க்கம் இப்படியும் இருக்கும் என்பதாய்!

–                     

மனதிடம் ”இது வேண்டும், இது வேண்டாம்” என என்னால் தீர்மானிக்க முடிவதில்லை.சூழல் அதைத் திறம்படத் தீர்மானிக்கின்றது.

–                     

வெளியேறும் வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!

–                  

எங்களை சீனாவுக்கு விரட்டுகிறார் மன்மோகன் – ரத்தன்டாடா # அவரு எங்களையும்தான்விரட்டுறாரு, ஆனா எங்கேனுதான் எங்களுக்கும் அவருக்கும் புரியல

–                     

“பெண் கொசுதான் கடிக்கும்” என்பதைக் கண்டறிந்து உலகுச் சொன்னவன், ஒருகணவனாகத்தான் இருந்திருப்பான். 🙂

–                     

 

பல ஆண்டுகளுக்குப்பிறகு கேம்லின் மை பேனா பிடிக்கும் வாய்ப்பு. எளிமையெனபால்பாயிண்ட் பேனாவில் தொலைத்த எழுத்தின் பழைய வடிவம் கொஞ்சம் கண்டேன்

–                     

மூளையில் ‘டோபோமைன்’ வேதிப்பொருள் சுரக்கும்போது ஏற்படும் கிளர்ச்சி,சந்தோசமுமே இணைய சமூகவலை தளத்தில் அடிமையாக காரணம் #தப்பு நம்முதில்ல

–                     

துரோகங்களில் தோற்பது மனிதர்கள் அல்ல. மனிதர்களை நம்பிய நம்பிக்கைதான்! 

–                 

உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 25 வது இடத்தில் ”ஃபேஸ்புக் மார்க்ஜூகர்பெர்க்” # இதெல்லாம் நாங்க கடுமையா உழைச்சு போட்ட தர்மம்

–                     

நாலு ட்விட் போட்டதுல எல்லாக் கோபமும்(!) நீர்த்துப்போச்சுப்பா. இப்ப ஒரு பிரச்சனையும்இல்ல # இல்லாட்டி மட்டும் என்னத்த கிழிச்சி… தைச்சு

–                  

”கர்நாடக அணைகளில் மொத்தம் எவ்வளவு தண்ணீர் உள்ளது” என்பதைக்கூடதெரிந்துகொள்ள கையாலாகாத வல்லரசாக இந்தியா இருப்பதில் பெருமிதம் கொள்வோம்.

–                     

என் ”கற்பனைக்கு” நிகரான ஒரு நல்லவனையோ, கெட்டவனையோ இதுவரைக்கண்டதில்லை!

–                     

”அப்போ, என்னை ஏன் பெத்தீங்க?” ஒருமுறையேனும் பிள்ளைகள் கேட்காவிட்டால்,பெற்றோரின் வளர்ப்பில் ஏதோ குறை இருக்கிறதென்று அர்த்தம்! 🙂

–                     

ஒரு அற்பக் கொசுவிடம் இருந்து தப்பிப்பதற்காக 
“கொசு வத்தி, கொசு மேட், கொசு லிக்விட், கொசு பேட், கொசு வலை, ஓடோமாஸ், ஜன்னல் வலை”  …………………….. என எத்தனையோ பயன்படுத்திய பிறகும் 
”இந்த கொசுத் தொல்ல தாங்கலடா நாராயணா” # கவுண்டமணி = தீர்க்கதரிசி :))

ஒரு தவறான புரிதலுக்கு விநாடிப் பொழுது போதும். விளக்கம் பெற / தர ஒரு யுகம்தேவைப்படுகிறது!

 

வீட்டு வாசற்படி கடக்கையில் சாக்கடைக்கு முகத்தைச் சுழிப்பதில் துவங்குகிறது அந்ததினத்திற்கான சகிப்புத்தன்மை!

–                   

உன்னை நீயாகவும், என்னை நானாகவும்….. # இப்போதைக்கும் எப்போதைக்கும்! 🙂

–                     

மரணம் மட்டுமே ஒருவனுடைய குற்றங்களை மற(றை)க்கச்செய்து புனிதனாக்கும்என்றால் ’கசாப்’பும் புனிதனே!

I don’t think there is one right/wrong answer here and each person needs to work out what works examine this site for him/her
Author

kathir

Recent Posts