கீச்சுகள்

கீச்சுகள் – 25

எழுதியது ஈரோடு கதிர்

பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி சற்றே நகர்ந்து போ, பிடிக்காததிலிருந்து விடுபடவும், பிடித்ததுபிடிக்காதபோது எதிர்கொள்ளவும் உதவும்

கசாப் தூக்கை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது # ஏவி விட்ட அமைப்பை, நாட்டை ஒன்னும் புடுங்கமுடியலை, இவன் உயிரைப் புடுங்கி என்ன செய்யப்போறோம்

ஓணம் வாழ்த்துச் சொல்ற ஒரு பயலும், சேட்டன்களுக்கு சொல்ற மாதிரி தெரியல, பெண் குட்டிகளுக்குமட்டுமே சொல்ற மாதிரி இருக்கு!

பசியோட இருந்தவனுக்கு இலையில தண்ணி தெளிச்ச மாதிரி போனாப்போகுதுனு ஒரு தூறல் மழை

ஏரி குளங்களுக்குச் சமாதி கட்டிய ஊரில் ஏன் பெய்யனுமெனக் கண்ணாமூச்சி காட்டுது மழை! 🙁

நாடாளுமன்றத்துக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் – ஜெ

# வீட்டிற்கு எந்த நேரமும் கரண்ட் போகலாம் – பொதுமக்கள்

தீட்டப்படும் கனவில் கூடுதல் வர்ணங்கள் ஒளிரட்டும்!

’எதை’யோ அடைவதற்கான ஓட்டத்தில் ’எதையெதை’யோ இழக்கின்றோம்!

சாமானியனை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரவாதிகள் “புதுப் பணக்காரர்கள்”

“நேர்மை முக்கியம், யாரையும் ஏமாற்றக்கூடாது, பொய் கூடாது, உண்மைதான் பேசனும்” குழந்தைகளிடம்பெரும்பாலும் சொல்லும் பொய்!

நீ பல நேரங்களில் உன்னோடுதான் போரிடுகிறாய், அங்கே வெல்வது நீ எனும் போதே தோற்றும் போகிறாய்!

இயற்கையாய் வந்த உடல் மேல் துணியைப் போர்த்திக்கொண்டு அந்தரங்கம் என அலறுகிறோம்.

இனிமே ’மழை’யும் அரசு வழங்கும் ”விலையில்லாப் பொருட்கள்” மாதிரிதான் போல, எப்பவாச்சும் வரலாம், வரமாலும் போகலாம்! :((((

என் தவறுகளை ஒரு கட்டத்தில் நீங்கள் மறந்துபோகலாம். ஒருபோதும் என்னால் மற(று)க்கமுடியாது, காரணம் அது “நான்” அறிந்தே செய்ததாக இருக்கலாம்!

”நீ செத்துட்டியாமே”னு யாராச்சும் வதந்தி கிளப்பினாலும் ’அய்யய்யோ அப்படியா’னு நம்புவாங்களோ!

# வதந்திகள் வாரம்

”இஞ்சி தின்ன கொரங்கு”எப்படியிருக்கும்னு பார்க்கனும்னா ஈமூ / நாட்டுக் கோழியில பணம் போட்டஆளுகளைப் பாருங்க!

விரும்பத்தகாத பாடங்களை, விரும்பத்தகாத சூழல்களில், விரும்பத்தகாத யாரோ, விரும்பத்தகாதவகையில் கற்றுக்கொடுக்கிறார்கள்!

24 மணி நேரம் இருந்தும் ”சிறப்பு தரிசன” நுழைவைக் கூட தடுக்க முடியாத கடவுளிடம், 2 நிமிடம் கும்புட்டுதன் கவலைகளை போக்கச் சொல்பவனே பக்தன்!

குருவிகளை அழிக்கத் தெரிந்த அறிவியலுக்கு ஒரு கூடு அமைக்கும் அறிவு கிடையாது! 

கடந்த காலம் தந்த நம்பிக்கையைவிட எதிர்காலம் குறித்த நம்பிக்கைதான் இன்னும் நம்மை இயக்குகிறது!

இரைச்சல்கள் ஏன் இசையாக உணரப்படுவதில்லை!

”உண்மை மட்டுமே பேசுவேன்” எனும் பொய்யைவிட ”பொய்யும் சொல்வேன்” எனும் உண்மை பிடிக்கின்றது!

”பாய்” ஃப்ரெண்டின் அருமை இன்னிக்குத்தான் தெரியுது! # ப்ரியாணி :))) ஈகைத் திருநாள்

ஊழல் இன்னும் புகாத துறை “செத்தபின் செல்லும் நரகம்”

சீயோன் பள்ளி பேருந்து குழந்தை மரணம் Vs பத்ம சேஷாத்ரி பள்ளி சிறுவன் மரணம் = 1.76L கோடி 2ஜிஊழல் இழப்பு Vs 1.86L கோடி நிலக்கரி ஊழல் இழப்பு

ரசிக்கவா, தற்கொலை புரிந்திடவா என்பதை ஒருபோதும் மலைஉச்சி தீர்மானிப்பதில்லை, புறப்படுகையில்இருக்கும் மனோநிலைதான்!

கோபத்தின் பசிக்கு ‘எதை’த் தீனியாக இடவேண்டும் என்பது புரியாததுதான் பெரும்பாலான சிக்கல்களுக்குகாரணம்! 

இதோ இப்போது கடந்து போகும் நிமிடம் இனியொருமுறை கிடைக்கவே கிடைக்காது. அது கொண்டாடியநிமிடமோ, திண்டாடிய நிமிடமோ! 

கலைஞரே உட்கார்ந்து நேரிடையாக கலைஞரின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் தட்டச்சு செய்வார் எனநினைப்பதுதான் இணைய விழிப்புணர்வின் உச்சம்! 🙂

ஒவ்வொரு முறையும் புத்தகத்திருவிழாவில் புத்தகம் வாங்கும் முன் 1 வாரத்துக்கும், வாங்கிய பின் 1 வாரத்துக்கும் ப(ந)டிக்கிறதே வேலையாப் போச்சு.

”இயந்திரத்தனமான போக்கிலிருந்து கொஞ்சம் கூடுதல் நேரத்தை வாசிப்பிற்காக பதியனிடவேண்டும்.வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக் கொள்ளமுடியும்.”

…. இப்படி எழுதி 1 வருசத்துக்கும் மேலே ஆகுது, ஆனாலும் அடுக்கி வெச்ச புத்தகம் அப்படியேதான்இருக்குது. இதைத்தான் ”அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”னு அப்பவே திருவள்ளுவத் தாத்தாசொல்லிட்டுப் போய்ட்டாரே…!

இன்னும் எத்தனை திருவள்ளுவர் வந்தாலும் உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா #என்னச் சொன்னேன்!

சில பதிப்பகத்துக்காரங்க மக்கள் தப்பித்தவறிக்கூட புத்தகம் வாங்கிடக்கூடாதுனே ’விலை’ போட்டிருக்காங்கபோல. #புத்தகத் திருவிழா 🙁

தெரிந்த பதிலுக்கான கேள்விகளையே தயாரிக்கின்றோம் பல நேரங்களில்!

வாரவாரம் சினிமா, ஹோட்டல் என சிலஆயிரங்களைச் செலவிடுவோர்கூட குடும்பத்திற்காகபுத்தகத்திருவிழாவில் சில நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்குவதில்லை

நம்மீது தவறு இல்லை என்பதே விடுதலையளிக்கிறது பலநேரங்களில்!

எல்லோருக்கும் தேவை அன்புதான் என்பது எவருக்கும் புரியாமல் இல்லை!

முகப்பு விளக்குகளில் கருப்புப் பொட்டு ஒட்டுறதுதான், இந்தியாவின் மிகப் பெரிய ”சாலைப் பாதுகாப்புத்திட்டம்” #’வல்லரசு’ இந்தியா

கேமரா கையிலேயே இருந்தாலும், சில கணங்களை, காட்சிகளை, நிகழ்வுகளை மனம் சேமித்துக்கொள்வதே பிடித்தமானதாக இருக்கின்றது.

தவறுகளுக்கு மட்டும் தவறாமல் சரியான ‘நியாயம்’ தேடுகிறோம்!

எந்த வகைக் கவிதை எழுதினாலும் பேசாம இருந்துட்டு, காதல் கவிதை எழுதினால் மட்டும் அனுபவமானுகேக்குற ஆராய்ச்சியாளர்கள் வாழ்க! வளர்க!! 🙂

இன்றும் தூரலோடு ஏமாற்றிப் போய்விட்டது, என்றைக்கு வரும் இதயத்தையும் குளிரச்செய்யும்பெருமழையொன்று!

சென்னையிலிருந்துகொண்டு கடலில் கால் நனைக்காதவர்களையும், ஈரோட்டிலிருந்துகொண்டு காவிரியில்கால் வைக்காதவர்களையும் ஒருங்கேகொண்டதுதான் உலகம்

பொறந்த வீட்டுச்சொந்தம் வர்றன்னிக்கு மட்டும் வித்தியாசமாக சமைக்கிற பெண்கள் இருக்கும் வரைஇந்தியா வல்லரசு ஆகவே ஆகாது # உங்க மேல சத்தியம்! 🙂

வட்டத்தின் கோடுகளில் இருக்கும் அடுத்தடுத்த புள்ளிகள் நேர்கோடுதான்.

கருவிகளற்ற ரீங்கார இசையமைப்பாளன் ‘கொசு’ #முடியல!

இலக்கிய அரசியல் ஏன் ஒரு புற்றுநோய்போல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது? அவதூறுகளோடு சண்டைபோடுறவங்கெல்லாம் 200 வருசம் இருந்திடுவாங்களோ:(

ஆடி-18க்கு வாழ்த்தாம ரஷ்சாபந்தனுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்றவங்களை புடிச்சு காவிரியிலஅழுத்தலாம்னு பார்த்தா காவிரியே வறண்டு கெடக்குது! 🙂

நாம் இப்போ வாழ்ந்து கிழிச்சிக்கிட்டிருப்பதற்குப் பெயர் ”வாழ்க்கை”யா?

கோவில்களில் பெண்கள் ஆடும் சாமியாட்டம் அல்லது பேயாட்டத்தைப் பார்க்கும்போது, அது ஒரு’வெடித்துக் கிளம்பும்’ வெளிப்பாடாகவே தோன்றுகிறது

பட்டாசுக் கட்டில் பற்றிய தீயாகவும் ’கோபம்’

Author

ஈரோடு கதிர்

Recent Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *