கீச்சுகள்

கீச்சுகள் – 26

எழுதியது ஈரோடு கதிர்

ஒன்றை ரசிக்க அதில் பொதிந்திருக்கும் அழகு மட்டுமே காரணமல்ல, இசைந்துருகும்மனதும்தான் காரணம்!

டீசல் ரூ.5 விலை உயர்வு – உடனடியாக தேநீர் விலை மற்றும் பேருந்து நிலைய சிறுநீர்க்கழிப்பிடக் கட்டணம் அதிரடி உயர்வு! #இந்தியாடா!

12% டீசல் விலை ஏறினா எனக்கென்னனு நினைக்கிறீங்களா…. பள்ளிக்கூட ’வேன்’க்குஇனிமே 20% கூடுதலா வெச்சுக்குங்க! 🙁

கரையான் புற்றுக்குள் பாம்பு குடி புகுவதுபோலே, காதல் மனதில் ஊடுருவுகிறது காமம்!

அன்பாய் இருப்போரை உண்மையாய் ரசிக்கையில் உயிர் சிலிர்க்கும்!

எதிர்ப்படும் எல்லா மனிதர்களும் புன்னகைத்துக் கொள்வதில்லை. மனவளர்ச்சிகுன்றியதாகச் சொல்லப்படுபவர்கள் எவரைப் பார்த்தும் புன்னகைக்கின்றனர்.

எதிர்க்கருத்து கொண்டிருப்போரை முட்டாளாகப் பாவிக்கும் மனோபாவமும் ஒரு போதை!

பாரதி இருந்திருந்தா ”அணுத் துகளொன்று கண்டேன் -அதை அங்கொரு நாட்டிலோர்உலையிடை வைத்தேன் பொசுங்கித் தணிந்தது நாடு” எனப் பாடியிருப்பாரோ?

எப்படி யோசித்தாலும் என் பெற்றோரைக் குறை சொல்ல ஒன்றுமில்லை என்னிடம், ”ஒரேசிக்கல்” என் பிள்ளையும் நாளை இதையே சொல்லுமா என்பதுதான்!

நினைவுகளைக் கொல்லத் தெரியவில்லை, நிலையில்லா வாழ்வில்!

பெண்களின் கண்களை மட்டும் பார்த்துப்பேசுவது பெரும் “வேள்வி”# ஆண் ’பாவம்’

கூடங்குளத்தில் என்ன நிகழ்ந்தால் எனக்கென்ன, எப்படியாச்சும் எனக்கு கரண்ட்கிடைக்கனும் எனும் பொதுபுத்திதான் சமகாலத்தின் மிகப்பெரிய சுயநலம்!

40 ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகள் கண்டுபிடிக்கப்படுவர் – இங்கிலாந்து விஞ்ஞானி #நாங்க ரொம்ப நாளாவே தமிழ் பேசுறவங்களை அப்படித்தானே பாக்குறோம்!

மழை பெய்யலைனா காயும், மழை பேஞ்சா தண்ணி தேங்கும்! இதுதான் ‘நரகம்’…. சாரி….இந்திய ‘நகரம்’!

சும்மா இருந்தவன்கிட்ட, ஒரு Holiday Resort அம்மணி போன் பண்ணி ”ஃபோர் வீலர் இருந்தாஒரு Tour offer தர்றோம். என்ன வண்டி சார் வெச்சிருக்கீங்க”னு கேட்டுச்சு. என்கிட்ட Tractorதான் இருக்குனு சொன்னேன். போனை கட் பண்ணிடுச்சு!

# விவசாயம் பண்றது தப்புங்ளா ஆபீசர்ஸ்!

அவசியமானதை விடுத்து அவசியமற்றதைப் பேச, நிகழ்த்த விரும்போதுதான் சிக்கல்கள்துளிர்க்கின்றன.

அன்பு எனும் ஒற்றை வார்த்தையில் நிகழும் மகிழ்வும், நிலவும் மாயத்தனமும்…அடேங்கப்பா!

அப்போவெல்லாம் பேங்க்ல பணம் கட்றதுக்கு, எடுக்குறதுக்குத்தான் ”க்யூ” நிக்கும்,இப்போவெல்லாம் டோக்கன் போடுறதுக்கே பெரிய ’க்யூ’ நிக்குதே!

ஒவ்வொரு மாதமும் தவிர்க்க முடியாதது பௌர்ணமி, அமாவாசை…………………………………. அப்புறம் ”கிரடிட் கார்ட் பில்”

ஆண் சூரியன் போலவும் பெண் நிலவு போலவும் காதலை வெளிப்படுத்துகின்றனர்!

நாம் தொலைத்தவைகளின் பட்டியலில் “சிரிப்பும்” இடம் பிடித்திருப்பதைசிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வோம்! 🙂

சில மரணங்கள் குறித்து பேசித் தீர்க்கவும் முடியவில்லை. பேசாமல் சேமிக்கவும்முடியவில்லை! 🙁

வெயில் காலத்தில் மழையை, மழைக் காலத்தில் குளிரை, குளிர் காலத்தில் வெயிலைத்தாங்கிக்கொள்ளலாம் என நினைக்கிறது எதையும் தாங்கமுடியா மனித சமூகம்

ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிக்கின்றது. கணவனுக்குமனைவியையும், மனைவிக்கு கணவனையும்தான் பிடிப்பதில்லை பாவம்! :)))

வென்றதைவிட தோற்றதுதான் அதிகம்!

ஃபேஸ்புக்ல பிறந்த நாளை மறைச்சு வெச்சாலும் வயசாகத்தான் செய்யும்.

#தத்துபித்து!

எது குறித்தும் முதலில் ஒரு “எதிர்ப்புக் குரலை” பதிவு செய்துவிடுவோம். எப்படியும்எதிர்காலத்தில் அது தேவைப்படாமலா போய்விடும்.

When watching a tv show, the netflix app will now automatically queue up the next episode and play it without the user https://www.celltrackingapps.com having to do anything
Author

kathir

Recent Posts