கீச்சுகள்

கீச்சுகள் – 27

எழுதியது ஈரோடு கதிர்

யார்யாரோ ஊட்டும் அவநம்பிக்கைகளை விட, யாரோ ஊட்டும் நம்பிக்கையில்தான்நகர்கின்றன நாட்கள்!

மரணம் பொதுவானது! 

உலகத்திலேயே வெளியான முக்கால் மணி நேரத்துல ”வெற்றி நடை” போடுவது தமிழ்சினிமா ஒன்றாகத்தான் இருக்கமுடியும்

#இந்த வெற்றிநடை ரவுசு தாங்க முடியல

அது ’வேற’! இது ’வேற’! #உலகத்தின் மிக ’அரிய’ தத்துவம்!

நிரம்பியிருக்கும் பணப்பைகளை விட, காலியாக இருக்கும் பணப்பைகளே ‘சுமையானது’ 

வாராத மழை வருமா!?. குளிக்காத என் பைக் இன்றாவது குளிக்குமா!?

#ய்ய்ய்யேக்கம்!

ஒருவரையே Blogல Follow பண்ணி, Google+ல Add பண்ணி, Twitterல Follow பண்ணி கடைசியாFacebookல Friend ஆக்கும்போது புரிகிறது உலகம் உருண்டையேதானு!

தக்கிமுக்கி IRCTC வேலை செஞ்சா பேங்க்காரன் பணம் தரமாட்டேங்கிறான். பேங்க பணம்தர்றேனு சொன்னா IRCTC தொங்குது.

#பேங்ல வேற காசு இருக்கனுமாமே!

பெரும்ப*லான சமரசங்கள், அதில் கிடைக்கும் லாபத்தை கவனத்தில்கொண்டேஅமைகின்றன.

# *ப குறில் அல்லது பா நெடில் 🙂

”என்கிட்ட”  நல்லா நோட் பண்ணுங்க…  என்கிட்ட…. ஒருத்தர் போன்ல பேசிட்டே, அங்கே”நான் important callல இருக்கேன், disturb பண்ணாதீங்க”னு யார்கிட்டையோ சொன்னப்பத்தான்புரிஞ்சுது, ஊர்ல அடிக்கடி பலபேரு சொல்ற important callக்கு உண்மையான அர்த்தம்என்னானு! :))))

கரண்ட் கட் ஆனா (பதிலும்கூட வராதுனு தெரியாம) EB ஆபிஸ்க்கு போன் போட்டு, “கரண்ட்எப்ப சார் வரும்”னு கேட்கும் அப்புராணிகள் நிறைந்த உலகம் இது

அழுக்கும் ஒரு நிறம் தான்!

Good Morning. Have a “Good Day”னு சொல்றதுக்குப் பதிலா Good Morning. Have a “Milk Bikis” Day-னு மாத்தி சொல்றது தப்பா! தப்பா!! தப்பா!!!?

எதிர்பார்த்த அளவு எது நமக்கு கிடைக்கலையோ அதுபத்தியே தான் சிந்தனை, பேச்சுஇருக்கும் #காதல் – முத்தம் – குடி – பணம் – பதவி – இன்ன பிற! 🙂

ஹேப்பி நியூ இயர், ஹேப்பி கவ் பொங்கல், ஹேப்பி டமில் நியூ இயர், அப்புறம்… ஹேப்பிவிநாயகர் பர்த் டே-னு கூட சொன்னீங்க…  சரி பரவாயில்ல… இப்ப ஹேப்பி ’பந்த்’டேசொல்றீங்களே…  # உலகத்துல நீங்கெல்லாம் அம்புட்டு ஹேப்பியாவாடா இருக்கீங்க!

ஆழ்ந்த உறக்கம் ஒரு வரம்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து மட்டும் SMSல சொல்லுங்க, கொஞ்சம் கொழுக்கட்டை,சுண்டல் கொடுத்தா கொறஞ்சா போய்ருவீங்க! # வரும் ஆனா வராஆஆதுடா!

அள்ளிக் கொடுத்தாலும், கிள்ளிக் கொடுத்தாலும் ”அன்பு = அன்பு”

இறுதியாகக் கணக்கிட்டுப் பார்த்தால், வாழ்க்கையில் இழந்ததும், ஈட்டியிருப்பதும் ’வெறும்’மனிதர்கள் மட்டுமே!

திருவள்ளுவர் ஏன் 1330 குறள்களோடு மட்டும் நிறுத்திவிட்டார்? # எதிர்காலத்தில்மனப்பாடம் செய்ய வேண்டிய பிள்ளைகள் பாவம் எனக்கருதி இருக்குமோ?

ஒரு கை பிடி திராட்சையை ஒன்றாய் தின்றாலும், ஒவ்வொன்றாய் தின்றாலும் அளவுஒன்றுதான், ஆனால் சுவை வேறுவேறு. 

இலவசமாக ஒருநாள் கிடைக்கும் மரணத்தை, ஏன் சிலர் அவசர அவசரமாக விலைகொடுத்து வாங்குகிறார்கள்!

கடலை மிட்டாய்க்குள் இத்தனை சுவையை, ஒளித்து வைத்த(இறை)வன் ரசனைமிகுந்தவனாகத்தான் இருப்பான்! 

ஒரு கையில் புகை வழியும் சிகரெட், மறுகையில் ஆவி பறக்கும் தேநீர். அழைக்கும்அலைபேசியை ஆட்கொள்ள மூன்றாம் கை இன்றி தவிக்கிறான் தேநீர்க்கடையில்!

மத்திய அரசு செய்யும் காரியங்கள் குறித்து உங்களுக்கு சரிவர புரியவில்லையெனினும்கவலைப்படாதீர்கள், அது சர்வ நிச்சயம், உங்களுக்கு எதிரானதேதான்!

Viele säugetierarten freelancer ghostwriter und auch vögel leben in individualisierten verbänden
Author

kathir

Recent Posts