கீச்சுகள்

கீச்சுகள் – 28

எழுதியது ஈரோடு கதிர்

“செய்தே ஆக வேண்டிய, செய்யப் பிடிக்காத(!) விசயத்தை” எவ்ளோ நாள்தான்தள்ளிப்போடுவே!? #deactivate

ஐப்பசினா அடைமழை பெய்யும்பா, இப்ப புயலுக்கு பேரு வெச்சு, செய்திப் பிரியர்கள்காதுக்கு சோறு போட்டு, புயலை ஒரு Branded Product ஆக்கிட்டாங்க

உற்றுப் பார்த்தால் எல்லா மரமுமே போதி மரம்தான்.

எல்லாம் “புரிஞ்சு” என்ன பண்ணப் போறோம்!

’அய்யோ மழைல வெளிய போகவே முடியலை’னு TVல புலம்பும் (அ)நாகரிகச் சீமானே…அடங்கு

# பெய்யவேண்டிய மழை பெய்யாம போனா குடிக்க தண்ணிகூட கிடைக்காது!

புது முகங்கள் சினிமா படங்களிலிலும், பழைய முகங்கள் விளம்பர படங்களில் (மட்டும்)வெற்றி பெறுகிறார்கள் #நானே யோசிச்சது!

ஒரு காலத்தில் Pen தொலைச்சோம், இப்ப Pen drive தொலைக்கிறோம். # அம்புட்டுதான்வளர்ச்சி cum வீக்கம்!

குழந்தைகள் கையில் மட்டும் ஓய்வெடுக்கும் சலங்கைகள்கூட சன்னமாய்ஒலித்துக்கொண்டேதான்!

ஒருவர்மேல் வரும் கோபத்திற்கு, அப்போது நிகழ்ந்த ஒன்று மட்டுமே பெரிதும் காரணமாகஇருப்பதில்லை. எப்பவோ, எங்கோ, யாரோ, எதற்கோ செய்ததும்கூட காரணமாகஇருக்கலாம்! #புத்திக்கொள்முதல்

ரோட்டில் புகை அடித்து கொசுக்களை வீட்டுக்கு விரட்டிவிடும் பணியை கொஞ்ச நாட்களாகசெய்யாமல் இருக்கும் மாநகராட்சிக்கு நன்றி!

கவர்மெண்டு பஸ்ல போறப்போ பார்க்கிறதுக்குனே சிலபேரு படம் நடிக்கிற மாதிரியும்,சிலபேரு படம் எடுக்கிற மாதிரியும் இருக்கு! # வாழ்க கலைச்சேவை

’தள்ளிப் போடுதலை’ மட்டும் உடனுக்குடன் செய்து விடுகிறோம்!

குடி போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் தற்கொலைக்கும், கொலைக்கும் நிகரானது.

”நேசிப்பு பழகு” # எனக்கு நானே 🙂

பறக்கத் தொந்தரவாக இருக்கும் என்பதனாலும் பறவைகள் தொப்பை வளர்க்காமல்இருக்கலாம்!

“விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” கலைஞர் டிவி வாயிலாக தமிழ்ச் சமூகம்அறிந்துகொண்ட ஒரு சொற்றொடர்! 🙂

ஒவ்வொரு முறையும் மழை தூய்மையாகத்தான் பெய்கிறது.

பக்கத்து சந்தில் பாதி சரக்குபாட்டிலை கீழே வெச்சுட்டு ஒருத்தர் என்னமோ பண்றாரேனுபார்த்தா 30+ பல்லு தெரிய, ஆயுதபூஜை சார்ங்கிறாரு குடிமகன் 🙂

ஒருத்தருக்கு பிரச்சனைனா, உடனே கூட இருக்கிறவங்க ’எல்லாம் தெரிஞ்ச என்கவுண்டர்ஏகாம்பர’ வக்கீல்கள் ஆகாம இருத்தல் நலம்!

கடந்து போக வேண்டியவற்றை சுமந்து திரிவதும்தான் பல சிக்கல்களுக்குக் காரணம்!

”எதையும் நினைக்கக் கூடாது” என நினைக்க உரிமையற்றவர்கள் நாம் 🙂

வெயிலடிச்சா எரியுது, மழை பெய்தா குளிருது, எந்த எருமை மாடும் ஓடவோ, ஒதுங்கவோஏன் இப்படி புலம்பவோகூட செய்வதில்லை. புகாரும் செய்வதில்லை 🙂

கேள்வியுறும் எல்லாப் பெயரிலும் யாரோ ஒருவரை அறிந்திருக்கிறோம், குறைந்தபட்சம்யாரோ ஒருவர் குறித்த நினைவையாவது தக்க வைத்திருக்கிறோம்.

மனதிற்கு ஒரு திறவுகோலும், விழி, நாசி, செவிக்கு வேறு திறவுகோலும்அவசியப்படுகிறது!

எல்லாமே பழசு ஆகும், பாராட்டு உட்பட!

மின் கட்டணம் எவ்வளவு, SMS மூலம் அறியலாம் # வாவ்… வாட் ஏ டெக்னாலஜி….அதுசெரி கரண்டு எப்போ போகும் வரும்னும் SMSல தெரியும்ங்ளா?

எல்லோருக்கும் எடை குறைக்க ஆசைதான், எவருக்கும் வழக்கத்தை விட மட்டும்விருப்பமிருப்பதில்லை # எனக்கும் நானே! :)))

கேள்வி: சார், IRCTC தளம் அடிக்கடி இயங்குறதில்லையே, எப்போ சரியாகும்?

நாராயணசாமி: இன்னும் 15 தினங்களில் IRCTCல் இருந்து மின்சாரம் கிடைக்கும்

சல்யூட் ராம்ராஜ்க்கு சல்ல்ல்யூட்ட்ட்! இந்த விளம்பரம் எப்போ போட்டாலும்..ராமராஜனுக்கு சல்யூட்னே என் காதுல விழுது! # வீ மிஸ் யூ பசுநேசன்!

ஒரு வார்த்தையை உதிர்ப்பதையும், விழுங்குவதையும் தீர்மானிப்பதற்கு ’விதி’ எனவும்பெயரிடலாம்!

“காதலி(லன்) பெயர் கடவுச்சொல்” என நகைச்சுவை சொல்லி அதுக்கு சிரிக்கனும்னுஎதிர்பார்க்கிற வரைக்கும் இந்த கரண்டு கட் இப்படியேதான் இருக்கும் 🙂

செய்யவேண்டிய வேலைகளை மட்டும் ஒழுங்காக செய்தால், வேலைகள் முடிந்தபிறகும்நிறைய நேரமும் மிச்சம் இருக்கின்றது #ஆனா செய்யமாட்டோம்ல, நாங்க யாரு?

”பழகிப்போச்சு” எனும் வார்த்தை பழகிப்போகாமல் இருந்திருந்தால், எத்தனையோமாற்றமும், புரட்சியும் இந்த சமூகத்தில் நிகழ்ந்திருக்கும்.

மின்வெட்டுக்குக் காரணம் கடந்த திமுக ஆட்சிதான் -நத்தம் #எந்த ஆட்சினு தெளிவாசொல்லுங்க 2006? 1996? 1989? 1971? 1969? அல்லது அண்ணா ஆண்ட 1967?

டிவி பார்க்கவிடாமல் தடுத்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி
# அட பக்கிக் பயலே……. ரஷ்யாவுல நடந்ததை ஏண்டா இங்கே தலைப்புச் செய்தில போடுற.என் நல்லநேரம் எங்கவீட்டு மகராசி இதெல்லாம் படிக்கிறதில்லை! 🙂

ஒட்டடை அடிக்கையில் ஒரு சிலந்திக்கூட்டை கலைக்கிறோம் எனும் குற்றஉணர்வுவரவில்லையா?

# சுத்தம் பேணா சோம்பேறித்தனம் எப்படி வேணா யோசிக்கும்!?

ஒரு காலத்துல வெளி ஊர்க்காரர்களைப் பார்த்தால் ”ஊர்ல மழை தண்ணி உண்டா”னுகேப்பாங்க. இப்ப ’கரண்ட் கட்’ எவ்ளோ நேரம்னு கேக்குறாங்க! 🙁

கவர்ச்சி வேறு! ஆபாசம் வேறு! # தொலைக்காட்சி பேட்டிகளில் எந்த ஊர் தமிழ்கதாநாயகியும் தெளிவாகப் பேசும் வசனம்!

தேடித்தேடிச் சேர்ப்பது, ஒரு கட்டத்தில் தீர்க்கவோ, தொலைக்கவோ தானே!

தமிழகத்தில் கொசுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு எதும் இல்லையா?

# To அணுவிஞ்ஞானி நாராயணசாமி! 🙂

பங்குசந்தை டிப்ஸ் தருகிறோம் என இந்தி / ஆங்கிலத்தில் பேசுவோரிடம் (தூய)தமிழில்பேசக் காரணம் மொழிப்பற்று மட்டும் இல்லை. தப்பித்தலும்தான்!

எவர் மேலும் யார் சொல்லியும் ஒரு பிரியத்தை சுமத்திவிட முடியாது. தானாக எதாவதுகணத்தில் துளிர்க்கும் ஒரு அற்புதம் அது!

கரண்ட் இல்லாம சரியாத் தூங்காம, நிறையப் பேரு கொஞ்ச நாள்ல பைத்தியம் பிடிச்சுஅலையப் போறாங்க! 🙁

ஒரு புது சினிமா வந்துட்டா, அங்க போடுற விளம்பரக் கொடுமையைவிட, இங்க போடுறவிமர்சனப் படுத்தல்தான் ஜாஸ்தியா இருக்கு!

புனைப்பெயரின் அதீத வளர்ச்சிதான் ’ஃபேக் ஐடி’கள்! :)))

நம்மை அள்ளி தமக்குள்ளே வைத்து பூட்டிக்கொள்கின்றன சில வார்த்தைகள். அதிலிருந்துவிடுபட முடிவதில்லை என்பதைவிட நாம் விடுபட விரும்புவதில்லை!

இந்தக் காற்றை, இந்த வெளிச்சத்தை, இந்தக் குளிரை, பெயர் தெரியா பறவையின்ஒலியை ஏன் இந்த நாளையும் கூட இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறேன்!

முதல் கவளத்தின் ருசி கடைசிக் கவளத்திலும் இருந்தால் சோறு பத்தலைனும் அர்த்தம்!

நான சரியாக எழுதாவிடடாலும, நீஙகள இதை சரியாக வாசிகக முடிகினற பொழுதாவதுபுரிகினறதா, எதையும புரிநதுகொளள கணணைவிட மூளைதான முககியம எனபது!

”என்னது கரண்டு போகாத ஏரியாக்களில் வீட்டுக்கு வாடகை ஜாஸ்தியா!?” அட ஹவுஸுஓனருங்களா, உங்க வீட்டுக்குள்ளேயே ரூம் போட்டு யோசிப்பீங்களோ!?

தமிழ்நாட்டு மக்களுக்கும் / அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் ஒரே பொதுத் தலைவலி“இந்தக் கரண்டை எவண்டா கண்டுபிடிச்சது?”

‘நான்’ என்பதைத் தவிர என்ன மிச்சமிருந்துவிடப் போகிறது என்னிடம்.

போன் பண்ணினா காசு போறமாதிரி, டெலிமார்க்கெட்டிங்காரங்க போன் பண்ணினா நமக்குநிமிசத்துக்கு இவ்ளோனு காசு வர்றமாதிரி எதும் வாய்ப்பு இருக்கா?

ஒரு சொட்டு மழை நீரை குடிக்கக்கூட இந்த நகர மண்ணுக்கு உரிமை இல்லை #கொஞ்சம்மழைக்கு எத்தன தண்ணி. ஒரு லார்ஜ்கு ஓவரா ஆடுற புதுக்குடிகாரன் போல

உயிர் வாழ சுவாசிக்கும் கையளவு காற்றைக்கூட, இது என் காற்று, எனக்கானதுஎனப்பிடித்து வைத்துக்கொள்ள முடியாதவன் நான்!

இருக்கும்போது அதன் பெருமையும், இல்லாதபோது அதன் அருமையும் தெரிவது’பணத்திலும்’தான்

#காசும்தான் கடவுளடா!

வருசத்துக்கு 3 பொறந்த நாள் கொண்டாடி மூத்தவங்க வயசை முந்த முடியாது. 3வருசத்துக்கு ஒருக்கா பிறந்தநாள் கொண்டாடி வயசைக் குறைக்க முடியாது

இயற்கைதரும் நீரை விடக்கூடாதென செயற்கையாய் முழுஅடைப்புநடத்திக்கொண்டிருக்கும்போதே கூடுதல் நீரைத்திறக்க கர்நாடகாவை உந்துகிறது இயற்கை. #பாடம்

மரணம் ஒரு அழகிய மௌனம்!

வாழ்நாள் முழுதும் புரியாதது ”மரணம்” என்பது வெற்றியா தோல்வியா?

வெற்றி தோல்வி போலவும், தோல்வி வெற்றி போலவும் தெரிவது மோக யுத்தத்தில்மட்டுமே! :)))

ஒற்றை முத்தம் ஒரு யுத்தத்தை நிறுத்தி, பிறிதொரு யுத்தத்தை விரும்பித் துவக்கும்வல்லமை படைத்தது! 🙂

“தனுஷ் ‘ஏவுகணை சோதனை வெற்றி

# போச்சுடா… இந்த சிம்பு பயவேற இதுக்குப் போட்டியா ஆரம்பிச்சிடுமே!

வலிந்து கட்டும் மௌனக்கோட்டையை, உதிர்த்திட ஒற்றை முத்தம் போதாதா!?

மௌனத்தை எப்படிச் சொல்வது! 🙂

தடுக்கி விழுந்தா ஏன் விழுந்தோம்னு யோசிக்காம, ஏன் சின்னப் புள்ளத்தனமா யாரும்பார்த்திருப்பாங்களோனு சுத்திமுத்தி பார்க்கிறோம்?

”அப்படிப்பார்த்தா… ஊர்ல யாருதான் பெர்ஃபெக்ட்” # பொது சமாதானத் தத்துவம்

டீ கடையில் நாம் அதிகம் அரசியலை விவாதிப்பதற்கு அங்கு தொங்கும் தலைப்புச்செய்திகளும், கசங்கிக் கிடக்கும் அன்றைய செய்தித்தாளுமே காரணம் #அதனால!

நூறு ரூபாயை வீணடித்த வருத்தத்தைவிட, கீழே கிடக்கும் பத்து ரூபாயை எடுப்பதில்இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது!

எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் சொல்லவே சொல்ல முடியாது! # அடிச்சுக்கேட்டாலும்சொல்லாதீங்க! சரியா? :)))

”ப்ரீபெய்டு வாழ்க்கை” நம்பிக்கைகளால் டாப்அப் செய்து, தீர்ந்து கொண்டிருக்கிறது.

எந்த முத்தக் கவளத்தில் தீரும் மோகக் குழந்தையின் பசி!

எண்ணத்தில் விளைவதைக் கட்டுப்படுத்த இயலுவதில்லை, வெளிப்படுத்துவதில் மட்டுமேகட்டுப்பாடுகள் வைக்கின்றோம்.

தப்பித்தவறி யாராச்சும் யோசனை கேட்கும்போது மட்டும், மூளைக்குள்ளே இருந்துரெண்டு கொம்பு முளைப்பது எப்படி? #என்ன மாயமோ மந்திரமோ தெரியல

சோறு தின்னக்கூட நேரம் ஒதுக்காமல் உழைக்கும்(!)போதுதான் புரிகிறது மனிதனாகப்பிறந்ததுக்குப் பதிலா காட்டில் ஒரு விலங்காகப் பிறந்திருக்கலாம்னு!

திடீரென ஒருவரின் செயல் திமிராகத் தெரிகிறதா? உங்கள் மனதிடம் கேளுங்கள், அவர்சமீபத்தில் உங்களுக்கு பிடிக்காமல் போனவராகவும் இருக்கலாம்.

அப்பவே ஃபேஸ்புக், ட்விட்டர் இருந்திருந்தா காந்தி, நேரு, காமராஜ், பெரியார், அண்ணாஎல்லாம் என்னபாடு பட்டிருப்பாங்க நம்ம தாத்தா, அப்பாகிட்ட!

Author

ஈரோடு கதிர்

Recent Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *