கீச்சுகள்

கீச்சுகள் – 31

எழுதியது ஈரோடு கதிர்

 

பிரச்சனைகள் சிக்கல் மிகுந்ததாகத் தெரிவதற்குக் காரணம், அதை அணுகும் முறையில்சிக்கல் இருப்பதுதான்!

சிலர் தெளிக்கும் அன்பின் துளிகள் மிகக் கனமானவை. சுமக்கச் சுமக்க கூடுதல் சுகத்தைத்தருபவை. சுற்றத்தில் அன்பு செலுத்து எனப் பணிப்பவை.

நட்புக்குள், உறவுகளுக்குள் சண்டை போடவும், சண்டை முடியவும் ”உலக மகா”காரணங்கள் தேவையில்லை

சிவகுமார் & குடும்பம் நடித்த டெங்கு கொசு சினிமாவுக்கான தணிக்கை சான்றிதழ்சரியானதுதானா? ஊர்ல கொஞ்ச நாளா கொசு குறைஞ்சிருக்கு!

பொய் எனும் ஆபரணம் தயாரிக்கத்தான் செய்கூலி சேதாரம் தேவைப்படுகிறது 

பாதை சரியானதுதானா என்பதை எல்லா நேரமும் கைகாட்டிகள் மட்டுமேசொல்லவேண்டியதில்லை. நமக்கும் தெரிந்திருக்கவும், புரிந்திருக்கவும் வேண்டும்

பழத்தை சக்கையோடும் உண்ணலாம், சாறு பிழிந்தும் அருந்தலாம். மகிழ்ச்சி என்பதற்குஇதுதான் நியதியென்றில்லை!

காதல் திருமணங்களுக்காக அதைத் தடுக்கவேண்டும், இதைத் தடுக்கவேண்டும்னுசொல்றவங்க பேசாமல் புள்ள குட்டி பெத்துக்கிறதையே தடுத்திருந்திருக்கலாம்.

பூமியில் உயிரோடிருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கையே அதிகம்

எங்க பகுதியில போன வருடம் 75kg IR-20 அரிசி ரூ.1500 இப்போ ரூ.2400. ஆனாப் பாருங்கவிவசாயிங்ககிட்ட விற்க நெல்லும் இல்லை அரிசியும் இல்லை

நம்பி வர்றவங்களை ஏமாத்துற சூர்யா விக்ரம் கார்த்தி etc குறுக்குக் கதாநாயகன்களைவிட”ராக்ஸ்டார்” மாதிரியான கிறுக்குக் கதாநாயகன் எவ்வளவோ Male

மௌனம் வலிமை இழக்கும் கணங்களில் வார்த்தைகள் முளைக்கின்றன.

e-mail முகவரியை தமிழில் அடிக்க வேண்டும் என ஒருவர் மன்றாடுகிறார். அவரின் இந்தமொழிப்பற்றை எப்படி தணிப்பதுனு தெரியாம முழிக்கிறேன்

எல்லாச் சொற்களும் விரல் நுனியில் மட்டுமே தோன்றி சொட்டிடுவதில்லை. மனதில்சுரந்து உதடுகள், விரல் வழியே சொட்டுவதுமுண்டு.

”வெட்கச் சிரிப்பு” பூக்கும் பொழுதெல்லாம் நினைத்துக் கொள்கிறேன் எனக்குள் இன்னும்கொஞ்சம் குழந்தைத்தனம் இருக்கின்றதென்பதை!

இந்த அரசியல் பேச்சாளர்கள் தொண்டைகளில் கண்ணாடியை அரைத்துத் தடவியதுயாராக இருக்கும். கரகரப்பில் காது கிழியுது.

எதிர்பாராத சூழலில் யாராவது பிடித்த ஏதாவது ஒன்றைப் பரிசளிக்கும் போது,உலகிலிருக்கும் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதே அன்பு துளிர்க்கிறது!

அன்பு என்பது கிடப்பில் இருந்து அள்ளுவதல்ல, பால் போன்று சொட்டுச் சொட்டாய்சுரப்பது!

வேலை நாட்களிலிருந்து விடுப்புக்குள் பொருந்திக்கொள்ளும் மனமும் உடலும்,விடுமுறைகள் முடிந்து வேலைக்குள் அவ்ளோ எளிதாகப் பொருந்துவதில்லை

மன வெற்றிடம் நிரந்தரமல்ல… எந்த ஒரு நொடியிலும் சட்டென நிரம்பலாம். அந்த நொடிஎது என்பதுதான் கண்ணாமூச்சி!

வருவதே தெரியாம வந்து சக்கபோடு போடும் படம்குறித்த மகிழ்ச்சியைவிட ஓவராஆட்டம்போட்டு வந்தவுடனே குப்புறவுழுகிற படம் குறித்த மகிழ்ச்சி பெரிது

திரையரங்கு வாசலில் காலை 7 மணி சிறப்புக்(!) காட்சிக்கு பனிக்குளிரில் 6 மணிக்குகணவர்கள் நிற்கும் வீதியிலேயேதான் ”இன்னிக்கும் ’பைப்’ தண்ணி வரலை” எனும்பதட்டத்தோடு வாழும் மனைவிகளும் இருக்கின்றனர்.

Use & Throw மனோபாவத்தில், தீர்ந்துபோன நாளை தூக்கி வீசும்முன் சேமிக்கவென அதில்கொஞ்சம் நினைவுகள் இருக்கின்றதென்பதை நினைவில் கொள்வோம்!

கொசுவர்த்தி / ஆல் அவுட் / குட் நைட்… இன்னபிற எல்லாமும் மனிதர்களுக்குப்பழகியதைவிட கொசுக்களுக்கு ரொம்பவே பழகிடுச்சு #கொசு புராணம்

இதுதான் நான் என இன்னொரு பக்கத்தைக் காட்டிக் கொள்ளாதது சில இடங்களில் வீரம்,பல இடங்களில் கோழைத்தனம்! 

தேமுதிகவில் திமுக என்று இருக்கிறதே – கருணாநிதி # அதிமுக, மதிமுவில் திமுகஇல்லை போல. கேப்டன் மச்சி ஒரு கோட்டரு சொல்லேன்! 🙂

ஒருவரைக் கூடுதலாய் பிடிப்பதாலேயே சில நேரங்களில் அவர்களின் செயல்களைப் புரிந்துகொள்கிறோம், பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை!

சமீப ஆண்டுகளில் காட்டிற்குள் யானைகளிடம் சிக்கிச் சாகும் மனிதர்களை விட,நாட்டிற்குள் யானைகளிடம் சிக்கிச் சாகும் பாகன்களே அதிகம்!

”ம்ம்ம்….. நம்பிட்ட்ட்ட்ட்டேன்” என அழுத்தமாக வரும் பதிலே சொல்கிறது நம்பவில்லைஎன்பதை!

மரணத்திற்கு நிகரான துன்பத்தை, மரணத்திற்கு முன்பே உணர்ந்திட வாழ்க்கை பலவாய்ப்புகளைத் தருகின்றது

காலையில் முகம் கழுவாமல் முன்னே வரும் பெண்.. அழகு…! பேரழகு…!!

புறக்கணிப்பைவிட பெருங்கொடுமை புறக்கணிப்பு புரியாதிருத்தல்!

The number of english words that begin with wh is not large, and even speakers who distinguish between the initial sounds of wales and whales do not pronounce wh as in pro-essay-writer.com every word that begins with the wh spelling
Author

kathir

Recent Posts