கீச்சுகள்

கீச்சுகள் – 32

 
வாழ்க்கையில் ஒருமுறையாவது ”பொய் சொல்லவேண்டும்” என ஆசைப்படுகிறேன்
# ஆசை நிறைவேறிடுச்சு!
 
 
நானும் நீங்களும் கிறுக்குவதும்கூட ஓவியம்தான். பார்க்கிறவங்க ஒத்துக்கிறதில்லைஎன்பது நம்ம குத்தமா பாஸ்?
 
 
பழகாததால் நீங்கள் தலைக்கனம் பிடித்தவராக, கர்வம் மிகுந்தவராக, ஏன்கெட்டவராகக்கூடத் தெரியலாம். நீங்கள் அப்படியேதும் இல்லாமலும் இருக்கலாம். 🙂
 
 
குடித்துவிட்டு சாலையோரத்தில் கிடப்பவர்களை மட்டுமே மது அடிமைகள் எனநினைத்துவிடுவது எளிதானதாகவும், வசதியானதாகவும் இருக்கின்றது
 
 
சரியான மண்ணில், பதமான சூழலில் விழும் வித்து முளைக்கத்தானே செய்யும்.
 
 
”எங்க ஊர்ல பூனை ஒன்னு பேசியது” என்றால், பேசியிருக்காது எனத் திடமாகநம்புபவர்களைவிட, பேசியிருக்குமோ என சந்தேகிப்பவர்களே அதிகம்!
 
 
பார்வையால் எத்தனை உரசினாலும் தேய்வதில்லை பௌர்ணமி நிலா.
 
 
உங்களுக்கு “66A” தெரிஞ்சா, எங்களுக்கு “49ஓ” தெரியாம போயிடுமா?
உங்களுக்கு எங்களையும், எங்களுக்கு உங்களையும்விட்டா யாரு இருக்கா?
 
 
நீங்கள் வியக்கும் ஒருவர் மனதால் உடைந்திருக்கையில், “உங்களுக்கென்னங்க கஷ்டம்”னுமொக்கையா மட்டும் கேட்காதீங்க! # கஷ்டம் பொதுவானது!
 
 
சாப்பாடு குறித்து ஒருவர் ”ப்யூர் வெஜ்” என்றார், நான் ”ப்யூர் நான்வெஜ்” என்றேன்.ஒருமாதிரி குறுகுறு பார்க்குறாங்க #ஏம்ப்பா அப்படி பாக்குறீங்க
 
 
நல்லதைச் செய்பவன் ”கெட்டவன்” என்பதற்காக வருத்தப்படவும், கெட்டவன் ”நல்லது”செய்கிறானே என்பதற்காக மகிழவும் செய்கிறோம் சூழலுக்கேற்ப.
 
 
 
நமக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்து, குழந்தைகள் திணிக்கும் சாக்லெட்டில்அதியுன்னதசுவையோடு கொஞ்சம் சொர்க்கத்தையும் உணர்ந்துவிடமுடிகிறது
 
 
தெரியாம கடித்த ஒரு மிளகில் இத்தனை காரமா? ஆமா அத்தனை காரத்தையும்தனக்குள்ளே வெச்சிருந்த மிளகுக்கு காரமாவே இருந்திருக்காதா? #காரப் பிதற்றல்
 
 
 
தொடர்ந்து தொடர்ந்து எதையோ நிரூபிக்க முனைந்து கொண்டே இருக்கின்றோம்.அவசரத்தில் அந்த ’எதை’ என்பதை மட்டும் மறந்துவிட்டு!
 
 
பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒருவகையில் குற்றம்தான்.
 
 
எடையற்ற தருணங்கள் இனிமையானவை. தலையிலும் மனதிலும்!
 
 
 
 
அன்பில் எல்லாம் நிரம்பும், தீரும். சில சமயம் தாமதமாக! 🙂
 
 
பதிலற்றவை சில. கேள்விகளை வீணாகத் தயாரிக்காதீர்கள்!
 
 
கடிக்கையில் நெல்லிக்காய் கசப்புதான். இறுதியில் இனிக்குமென மனசுக்கும், புத்திக்கும்தெரியுமென்பதால் தாங்குகிறோம் கசப்பினை!
 
 
 
’டாஸ்மாக் பாவம்’ மலிவு விலை மெஸ்ஸிலாவது தீரட்டும்!
 
 
பல்லிளிக்கிற வெயில்ல, போறவேகத்துல பொசுக்னு இண்டிகேட்டர் போட்டுதிரும்புறீங்களே, உங்களையெல்லாம் பெத்தாங்களா, ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா?
 
 
களவாடுதலும் களவுபோதலும் அன்பில் இனிக்கிறது! #களவுத்துறை
 
 
ஹெலிகாப்டர் சர்ச்சையை அரசியலாக்க வேண்டாம் – “சல்மான் குர்ஷித் # அரசியலாக்கவேணாம், but கொஞ்சம் பெப்பர் தூக்கலா போட்டு பொறியலாக்கிடலாம்!
 
 
 
’ரகசியத்தை ரகசியமாகவே’ வைத்துக்கொள்ள விரும்பாத மனிதர் உண்டா!?
 
 
வெறுக்க இருக்கும் காரணங்களைவிட, நேசிக்க கூடுதலாய் ஒரு காரணம் இல்லாமலாபோய்விடும்!
 
 
”கட்டுப்பாடு” இல்லையென கட்டுப்பாடுகளால் கட்டுப்பாட்டை உருவாக்குகிறோம் #ஷ்ஷ்ஷ்ப்பா!
 
 
சில நேரங்களில் எதிரிகளைவிட, நண்பர்களைத்தான் சமூகம் அதிகம் சந்தேகிக்கின்றது.

 

 
 
விவாதத்தில், அறிவுரையில் புத்திசாலியிடம் மௌனம் காப்பது வீரமல்ல, முட்டாளிடம்மௌனம் காப்பதே வீரம்!
 
 
 
எத்தனை சொன்னாலும் தீர்வதில்லை பழைய காதல் குறித்த நினைவுகள்!
 
 
எதைக் கண்டு ஒரு சமயத்தில் தெறித்து ஓடுகிறோமோ, அதை நோக்கியே பிறிதொருசமயத்தில் ஓடவைப்பதில் ”காலம் வெல்கிறது”
 
 
ஒரு நெல்லிக்காயை மெல்ல மெல்லக் கொறித்த பிறகு, பரிதாபமாக மிஞ்சும்கொட்டையையும் மென்று கொண்டேயிருந்தால்… நீயும் என் தோழனே!
 
 
காசு இருக்கிறதெனக் குடிக்கும் ஒரு கோக், பெப்ஸிக்கு கொள்ளைபோகும் நீரில், ஒருமனிதனின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்திடலாம்னு நினைக்கிறேன்
 
 
அவ்வப்போது கதறி, பொங்கி, புலம்பி என்ன கிழிச்சுடப்போறோம். மனுசியை மனுசியாய்பார்க்கும் பக்குவத்தை ஒருவனுக்கு கற்றுக் கொடுத்துவிடாமல்!
 
 
 
 
புல்லின் தலை வருடும் தென்றல் கண்ணுக்குத் தெரிகிறது, பெரும்பாறையைப் புரட்டமுயலும் புயல்க்காற்று கண்ணுக்குத் தெரிவதில்லை!
 
 
ஜூன் மாதத்திற்குப்பின் மின்வெட்டே இருக்காது – நத்தம் விஸ்வநாதன் # ஜூன்மாதத்திற்குப்பின் கேலண்டர் இருக்குமா இருக்காதுங்ளா!?
 
 
குறுகிய சாலையில் நேராகச் செல்ல உங்களுக்கு இருக்கும் அதே உரிமை, பெரியவாகனத்தை குறுக்குமறுக்காகப் போட்டு திருப்ப முயல்வோருக்கும் உண்டு!
Author

ஈரோடு கதிர்

Recent Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *