கீச்சுகள்

கீச்சுகள் – 33

எழுதியது ஈரோடு கதிர்

 

எல்லாக் கட்சிக் கூட்டங்களிலும் சூப்பர் டூப்பர் கூட்டம். சேர் போட்டு உட்கார வெச்சு, காசுதந்து

# வாடகைத் தொண்டர்கள் வாழும் காலம் இது!

 

8 am, 12 pm, 4 pm, 9 pm, 1 am எத்தனைவாட்டி குளிச்சாலும், அடங்காம எரியுதே.

# என்னா வெயில்டா சாமீ 🙁

 

ஒற்றைப் பறவை

வானில் அளக்கிறது

உறவுப் பறவைகளின்

பயணப்படா தொலைவினை.

கம்மஞ் சோற்றைத்தான் அமிர்தம்னு சொல்லியிருப்பாங்களோ!?

கர்நாடக பாஜக சட்டசபை ஆளுக எல்லாம் சேலம் சித்த வைத்திய சாலையில் கணக்குவெச்சிருக்காங்களோ? அடிக்கடி இதே வேலையா திரியறாங்க!

பிள்ளைகளை அவர்களின் வயது, வளர்ச்சியைவிடக் குறைவாக அன்பெனும் பெயரால்(!) “குழந்தைத்தனமாக” நடத்த முயல்வதும் குற்றமே!

பிள்ளைகளின் வளர்ச்சி, வயதைப் பொருட்படுத்தாமல், அன்பென்ற பெயரில், அவர்களின்நிலைக்கு குறைவாக ’குழந்தைகளாக’ பாவிப்பதும் ஒருவகை குற்றம்தான்!

கார் வாங்க வீடு தேடிவந்து லோன் தந்துட்டு, மாடு வாங்க லோன் தர யோசிக்கிறசமூகத்தில்தான் காபிக்கு வாங்குற பால் விலை அதிகம்னு கவலைப்படுறோம்

எத்தனை ரிதமாய் ஊதினாலும், அவசர ஊர்தியின் சங்கொலியை ஒருபோதும் ரசிக்கமுடிவதில்லை!

சனிக்கிழமை பள்ளிக்கூடம் வெச்சுட்டாங்களாம், இந்த ”குட் ஃப்ரைடே” சனிக்கிழமைவந்திருக்கக்கூடாதானு கேலண்டரை திட்டுது எங்க வீட்டு வாண்டு!

 “அங்கே 2 மணி நேரம் மட்டும்தான் பவர் கட்டா?” எனக் கேட்கும் ஊர்களைப் பார்த்துசென்னை ”போடா வெண்ணை” என்கிறது.

ஆரம்பிக்கும் தருணத்தில் முடிவு தெரிவதில்லை. முடிவுறும் தருணத்தில் ஆரம்பம்நினைவில் இருப்பதில்லை!

மனசும் ஓர் இசைக் கருவியே!

இந்த தினத்தின் முதல் ரகசிய முடிச்சு அவிழ்ப்பு ‘விடியல்’

வெளுத்துப்போற மசுருக்கு சாயம் பூசுறதுல காட்டும் அவசரத்தை / கவனத்தை,உளுத்துப்போற மனசைப் பாதுகாக்க ஒருபோதும் காட்டுவதேயில்லை!

உண்மை என்பதையும் விட, ஓங்கிக் குரல் கொடுப்பவனையே உலகம் உடனே திரும்பிப்பார்க்கிறது!

6.54க்கு போன கரண்ட் 7.18க்கே வந்துடுறதா? பொறுப்பில்லா EBக்கு கடும் கண்டனங்கள்!

# நடுசாமத்துல புடுங்கினா மட்டும் பொறுப்புல குறைச்சலில்லை

அரசியல்வாதி – பொதுஜனத்திற்கு இடையே இருக்கும் இடைவெளிக்கு நிகரானதொருஇடைவெளி, சமூகவலைதள ஆட்கள் – அதில் இல்லாதோர் இடையே நிலவுகிறது.

சமையல் அறையில் கரித்துணி காணாம போறதுக்கெல்லாம் CBI விசாரிக்க மாட்டாங்கஎன்பதைப் புரிய வைக்கமுடியாத தருணங்களைக் கொண்டதும்தான் வாழ்க்கை!

7 ரூபா போட்டு ஒரு கிளாஸ் மொக்கை(!) ”டீ”ய குடிக்கிறதுக்கு, 10 ரூபா போட்டு ஒரு சொம்புகம்மங்கூழ் தாராளமா குடிக்கலாம்!

#புத்திக்கொள்முதல்

வாழ்தல் இனிது. வாழ்தல் அறம். வாழ்வு தவம்.

குடும்பமா கிளம்பும் போது கார் டயர் பன்ச்சரா இருப்பதைக் காண கொடுப்பினை வேண்டும். #இடுக்கண் –> நகுக

ரொம்ப வருசங்களுக்குப் பிறகு நடு சாமத்தில் தண்ணீர் பிடிக்கும் மக்கள். #அதுவும் மார்ச்மாசமே 🙁

போராடி மட்டும் என்னவாகிடப் போகிறது என்கிறீர்கள் நீங்கள்!

போராடாமல் மட்டும் என்னவாகிடப்போகிறது என்கிறார்கள் அவர்கள்!

இன்று பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது – செய்தி # இதுக்கும் பழக்கதோசத்துல இப்பவேபோய் க்யூல நின்னுடுவாங்களே!

எல்லாமுமே ஒரு விடைபெறுதலின் வரைதான்!

குழந்தைகள் கடைப்பிடிக்கும் மௌனத்தில் பொதிந்திருக்கும் கோபம் உலகின் அதிவலிமைமிகு கோபம்

எதிரி விரும்புவதைச் செய்வதைவிட செய்யாமலே இருப்பதும் வீரம்!

இயலாமையின் முதற்கட்டம்…. கோபம், இறுதிக் கட்டம்….. சபித்தல்!

அழுகையும் சிரிப்பு போன்ற ஒரு வெளிப்பாடுதானே! அழுகைக்கு ஏன் இத்தனை ஒளிவுமறைவு தேவைப்படுகிறது!

மூனு பெக்-லிருந்து நாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப் பதில் இரண்டோடுஎழுந்துவிடுவதுதான் வீரம்!

8 மணிக்கு போக வேண்டிய கரண்ட் 8.03க்கு போகுது. கூடங்குளத்துல நா.சா.கம்பெனிக்காரங்க கரண்ட் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களோ?

Mobile, SMS, Gtalk, Facebook, Twitter, Skype, WhatsApp இன்னும் எத்தனையெத்தனையோஎல்லோருக்குமிடையே, எனினும் மௌனமே பேசுகிறது பல உறவுகளில்

மனிதன் அதிகமாக அஞ்சும் ஒரு சக உயிரினம் “மனிதன்”

அறிமுகங்கள் முடிந்து, ஆர்வங்கள் பகிர்ந்து, எல்லாம் கரைந்த ஒரு நற்பொழுதில்(!) எளிதாய்ஆரம்பிக்கிறார்கள் ’பொறணி’ பேச!

உள்ளங்காலில் ஒரு கொசு கடித்துக் கொண்டிருக்கிறது. ரொம்பவும் பஞ்சத்தில் அடிபட்டகொசு போல! 🙂

“அதெல்லாம் டைவர்ஸ் ஆயிருச்சுங்க” வெகு சகஜமாக புழங்குகிறது கிராமங்களிலும்.

”கெடா விருந்து”க்குக்கு அழைக்கப்பட்டிருக்கும் தினம் ஆசிர்வதிக்கப்பட்ட தினமாஇல்லையா!? நீங்களே சொல்லுங்க!

காலையில் சமையலறையில் கூடமாட ஒத்தாசை செய்தால், அன்றைக்கு மதிய சோறுகூடுதல் சுவையாய் இருக்கின்றது #அனுபவதானிப்பு

சுமக்க முடியாததை ஏன் இறக்கி வைக்கக்கூடாது?

”குடி” ஆரம்பத்தில் சுவாரஸ்யம், பின்னர் அது பழக்கம், ஒரு கட்டத்திற்குப் பிறகு அது நோய்!

நமக்கு நாமே தரக்கூடிய எளிய பரிசு “மௌனம்”

”நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே!?” எனும் பீடிகைகளில் தப்பாநினைக்க ஏதோ ஒன்று இருக்கவே செய்கின்றது!

இதென்னடாது காலண்டர்ல பிப்ரவரி 28ம் தேதிய கிழிச்சா, மார்ச் ஒன்னாம் தேதி வருது. #நடுவுல கொஞ்சம் தேதியக் காணோம்

Author

ஈரோடு கதிர்

Recent Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *