கீச்சுகள்

கீச்சுகள் – 39

எழுதியது ஈரோடு கதிர்

 

இந்த தேசத்தின் ஆகச்சிறந்த வளர்ச்சியை கொசுக்களின் எண்ணிக்கையில் உடனடியாகஉணர முடிகிறது.

  • ··

மனிதனின் சிக்கலை மனிதனும் நாயின் சிக்கலை நாயும்தான் நன்கு உணர முடியும்!

  • ··

கச்சத்தீவை மீட்க முடியாது – மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பதில்.

# பாஸ் அடமானம் வெச்ச ”இந்திய தீபகற்பத்தை” எப்ப மீட்பீங்க!

  • ··

பயணித்த எல்லாச் சாலைகளும் நான் தெரிவு செய்ததல்ல! இடமும் வலமுமாய் பிரிந்தஇடத்தில், ஏதோ ஒன்றில் திரும்பியதும் கூட!!!

  • ··

ஊருக்கு பண்ற அறிவுரையை, ஒரு நாளைக்காவது ஆள் உயர கண்ணாடி முன்னாடிதைரியமா செய்து பார்த்துடனும்!

  • ··

விபத்து ஒருபோதும் வசதி வாய்ப்புகளை, காதலை, அந்தஸ்தை, கதாநாயகத்தனத்தை,மிஞ்சியிருக்கும் கடமையை என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை!

  • ··

வீட்டுக்காரம்மா ஊருக்குப் போனா ‘ஹைய்யா…ஜாலி’ னு ஸ்டேட்டஸ் போடத் தெரியுது.

கருமம் ‘டீ’க்கு சரியான அளவுக்கு சர்க்கரை போடத்தான் தெரியல.

  • ··

பாலியல் கொடுமைகளுக்கு ”பெண் / அழகு / ஆடை / கவர்ச்சி” என பல காரணங்கள்சொல்வோர், ”அது ஆணின் கேடுகெட்ட செயல்” என்பதை மட்டும் மறப்பது ஏன்?

  • ··

பதிலே சொல்லாதவனிடம், ’பதில்கள் இல்லை’ என்று மட்டுமே அர்த்தமில்லை. பதில்சொல்ல வேண்டிய அவசியமற்ற நிலையும் இருக்கலாம்.

  • ··

போதும் போய்விடலாம் எனத் தோன்றுகையில்.. இல்லை இருக்கலாம் எனவும்தோன்றுகிறது!

  • ··

 

ஹமாம் சொல்ற ”10 சரும நோய்கள்” ஆர்பிடெக் சொல்ற ”6 தசை நார்கள்” என்னென்னனுயாருக்காச்சும் தெரியுமா? அட அவங்களுக்கேயாச்சும் தெரியுமா?

  • ··

எதையெல்லாம் உண்மையென நம்புகிறோமோ அது அப்படி இல்லாமல்இருப்பதுபோலவே, எதையெல்லாம் பொய்யென நம்புகிறோமோ அதுவும் அப்படிஇல்லாமல் இருப்பதுண்டு

  • ··

”திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது…” எந்தப் படமா இருந்தாலும் முதல் நாளேடிசைன் பண்ணி வெச்சுக்கிறாங்க!

  • ··

எந்த நோய் வந்தாலும், அப்போதைக்கு அந்த நோய்தான் உலகத்தின் கொடிய நோயாகமனதுக்கு தோன்றுகிறது! 🙂

  • ··

ஒரு காலத்தில் ”ஃபேக் ஐடி” என்பதை, பேய், பிசாசு, பூதங்கள் தான் வைத்திருக்கும்,மனிதர்கள் வைத்திருக்க மாட்டார்கள் என நினைத்தேன்! 🙂

  • ··

மழைக்கு ஒதுங்குகையில் மனதுக்கு உகந்தவர்களோடு உரையாடுதலில் உணரலாம்சொர்க்கம் இப்படியும் இருக்குமென!

  • ··

கோபப்பட்டு குழந்தைகள் முறைக்கும் தருணங்களில் கடவுளும் கூட நடுக்கம் கொள்வான்!

  • ··

சமீப காலங்களில் இரண்டு நிகழ்கின்றன…! 1. எதையுமே நிழற்படம் எடுத்துக் கொள்வது! 2.எடுத்த நிழற்படங்களை பார்க்காமலேயே இருந்துவிடுவது!

  • ··

வரவர காவிரி மாதிரி ஆயிடுச்சு தூக்கம், மகிழ்ச்சி, காசு, எழுத்து etc திடீர்னு வறண்டுடுது,திடீர்னு வெள்ளமா அடிச்சிக்கிட்டுப் போகுது!

  • ··

ஒரு ‘சுதந்திரம்’ என்பது மட்டுமே உன்னை எல்லாத் தவறுகளுக்கும் அனுமதிக்கிறதெனில்,அது சுதந்திரம் அல்ல, அதுவும் ஒருவித விலங்கு தான்! #மீள்

  • ··

ஒரு வாரக்கடைசியில் ஆடி 18 ஒரு வாரக்கடைசியில் ரம்ஜான் ஒரு வாரக்கடைசியில்சுதந்திர தினம்! யாருப்பா சொன்னது ஆடி மாசம் சரியில்லாததுனு!? 🙂

  • ··

மழை பெய்கையில் உங்களுக்கு வருவதாகச் சொல்லும் நினைவுகள், மழைபெய்யாதபோதும் எங்கள் நினைவில் வரலாம்! # மழை பெய்யாத ஊரில் வேற என்னசெய்றது!

  • ··

புது டச்-ஸ்க்ரீன் போனில் எண்களை ஒத்தும்போது தவறுதலாக விழ, ’இந்த புது டச்-ஸ்கீரின் படுத்துதுங்க’னு மக்கள் வெட்கப்படுறதே ஒரு அழகியல்தான்!

  • ··

சர்னு சீறும் கோபத்தை சட்டுனு பிடிச்சு, கசக்கி வாயில போட்டு மென்னு எச்சிலோடுகலந்து துப்பிட்டு, வேற வேலையைப் பார்க்கனும் என்பதைத்தான் பாரதி “ரௌத்திரம்பழகு”னு சொல்லியிருப்பாரோ!? 

  • ··

துக்குனியூண்டு புழுவிற்குத்தான் பெரிய மீன் சிக்குகிறது!

  • ··

அவ்வப்போது ’மின் வெட்டு’ மூலமாக, தமிழகத்தில்தான் இருக்கிறோம் என்பதை மீண்டும்நினைவூட்டத் துவங்கியிருக்கிறார்கள்.

  • ··

வாழ்க்கையெனும் பெருங்கடனை சக மனிதர்களிடம் செலுத்தும் அன்பின் மூலமேஅடைக்க முடியும்!

  • ··

ஒரு தவறை உணர்ந்து(ம்) ஏற்றுக்கொள்ள மறுக்கும்போதுதான், வாழைமரத்தடியில்கன்றுகள் முளைப்பதுபோல அடுத்தடுத்த தவறுகள் வேகமாய் முளைக்கின்றன.

  • ··

நெகிழச் செய்யும் இறுக்கச் செய்யும் எது ஒன்றும் தரா இன்பத்தையும் வலியையும்சுகத்தையும் சுமையையும் கலந்தும் தரும்! #அன்பு

  • ··

ஒரு பக்கம் ஆற்றில் கடும் வெள்ளம், மறு பக்கம் குடிநீர் கேட்டு சாலை மறியல்… ஊரையும்நாட்டையும் நல்லாத்தாம்யா வெச்சிருக்கோம்!

  • ··

தமிழ் நாட்டிய(!) உலகம் கண்டுபிடித்த, தமிழ்ப்படுத்த முடியாத அருமையான ஒருகலைச்சொல் “கெமிஸ்ட்ரி”. # 6 முதல் 60வது வரை!

  • ··

குழந்தைகள் குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சிலநேரங்களில் தோற்றுப் போய்விடலாம்.

  • ··

’முடியாது’ ’முடியும்’ என்ற இரண்டுமே நம்பிக்கைதான். ஆனால் இரண்டும் ஒன்றல்ல!

  • ··

5 வருசம் 10 வருசம் படிச்சு IAS ஆகி ஆட்சியர் ஆகுறதுக்குப் பதிலா, 5வது / 10வது மட்டும்படிச்சுட்டு அரசியல்வாதி ஆகிடுங்க! #யாராருக்கோ

  • ··

பொதுவாக அவர்கள் யாரிடமும் கருத்துக் கேட்பதில்லை ஆனாலும் யாரும் அவர்களிடம்கருத்து சொல்லாமல் போவதில்லை!

  • ··

”திருமதி தமிழ்” 100 நாள் வெற்றிவிழா கண்ட நிலையில்கூட எவரும் அதை திருட்டு DVDல்பார்க்காமலிருப்பதற்கு இன்னொரு பெயர்தான் ”அறம்”

  • ··

ஓசில கிடைக்குதேனு ஒரே நேரத்தில் மூனு எளநி குடிப்பதைத்தான் ‘காஞ்ச மாடு கம்புலபூந்தமாதிரி’னு சொல்லியிருப்பாங்களோ!?

  • ··

இயற்கையின் பெருங்கருணைக்கு முன் மனிதன் ஒரு யாசகன் மட்டுமே!

  • ··

சீக்கிரம் ஒரு சபதம் எடுக்கவேண்டும் “இனிமேல் சபதமே போடக்கூடாது” என்று!

  • ··

வன்மம் உரமாகட்டும் அன்பு விதையாகட்டும்!

  • ··

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக அழகானதாக, நளினமானதாக இருப்பதில் “பச்சைமிளகாயும்” ஒன்று!

  • ··

முந்தாநேத்து பொறந்த கொழந்தை ஒன்னுக்கு போறமாதிரி 4 துளி மழை அதுக்கு 7பேர்குடை #பெரியோர்களே தாய்மார்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையா

  • ··

ஓங்கிய மரங்கள் தாலாட்ட குளிர் தாவியணைக்க மென் இருள் மெலிதாய் உரச மனம்ஒப்பும் நட்புகளோடு புரியும் உரையாடல் உன்னதம்.

  • ··

நிரம்பியோடும் நதி பேரழகு அன்பு தளும்பும் மனம் போல்.

  • ··

உங்கள் மீது நான் புகாரின்றி இருப்பதற்கு முன் என்மீது நான் புகாரின்றிருத்தல்அவசியப்படுகிறது!

  • ··

சாமி பார்க்க லேட்டாகும் என ”சிறப்பு தரிசனம்” எனும் பெயரில் கௌரவமாக காசுபிடுங்குவதற்குப் பெயரும் லஞ்சம் தான்!

Author

ஈரோடு கதிர்

Recent Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *