கீச்சுகள் தொகுப்பு – 51 எழுதியது ஈரோடு கதிர் குழந்தைகள் அழுதுகொண்டே எதாவது பேச வரும்பொழுது ”முதல்ல அழுகாம பேசு!” என அதட்டுவது அதிகாரத்தின் உச்சமா? அன்பின் எச்சமா!? – பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் விடுமுறையென்றால் அந்த நாளை எல்லோருக்குமான விடுமுறை தினம் என்பது போலவே குடும்பம் கருதுகிறது! – எல்லாத் தாமதங்களுக்குப் பின்னாலும் காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக அந்தக் காரணங்கள் மிகப் பிடித்தமானதாகவும் இருக்கின்றன. – அன்பில் நிகழ்த்தப்படும் ஒரு வன்முறை “நான் எது செய்தாலும் நீ கோபப்படவே கூடாது!” – அடிமைப்பட்டிருப்பது குறித்து கிஞ்சித்தும் வெட்கமில்லை. ஆனால் அடிமைப்பட்டிருக்கேன் என ஒப்புக்கொள்ள மட்டும் அநியாயத்திற்குக் கூசுது! – வாட்ஸப்ல புத்திசாலித்தனமா ஆசைப்படுறது நம்ம Last seen தெரியக்கூடாது, ஆனால் மத்தவங்க Last seen தெரியனும் :) – யாராச்சும் செல்ஃபி போட்டால், அதை ’செல்ஃபி’னு கண்டுபிடிச்சு சொல்றதை ஆகச் சிறந்த கண்டுபிடிப்பா நம்ம சனம் நினைக்குது! – ஐஸ் பக்கெட் சேலஞ், ரைஸ் பக்கெட் சேலஞ் மாதிரி பாஸ்வேர்டு எடுத்துட்டு “Free WiFi சேலஞ்ச்” னு ஆரம்பிச்சா கொஞ்சம் புண்ணியமாப் போவும்! – துணிக்கடை ஆளுயரக் கண்ணாடியில் பூதாகரமாத் தெரிஞ்சவுடனே முடிவெடுத்துட்டேன், ”இனிமே கண்ணாடி வெச்சிருக்கிற துணிக்கடைப் பக்கம் போகக்கூடாது”னு! – பச்சைக் கலர்ல போர்டு வெச்சுட்டாவே அது ”இயற்கை அங்காடி” ஆயிடும்னு….. அவங்களும் நினைக்கிறாங்க, இவங்களும் நினைக்கிறாங்க! – ஆசைப்படுவது என்னவோ இரண்டங்குல நாக்குதான்… ஆனால் நாள் முழுக்க, ஏன் ஆயுள் முழுக்கவும் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பதென்னவோ வயிறுதான்! #தொப்பை – எவ்ளோ வயசானாலும் பிறந்த நாளில் வாழ்த்தும்போது கொஞ்சூண்டு வெட்கம் பூக்குமே, அதுமட்டுமே அவர்கள் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் குழந்தைத்தனம்! – கொடும் மரணங்கள் விதைத்துச் செல்லும் துக்க வித்தை அறுத்தெறிய தலைமுறைகள் போதாது. – என்ன ’வேலை’ செஞ்சா உடம்பு குறையுங்கிறதைவிட, என்ன ”சாப்பிட்டா” உடம்பு குறையும்னுதான் எல்லாருமே கேக்குறாங்க! – உடல் நலத்துக்கு தினமும் ’ஆப்பிள்’ சாப்பிடுறாங்களோ இல்லையோ, கையில ஒரு “ஆப்பிள் போன்” வச்சுக்கிறது அந்தஸ்த்துனு நினைக்குது சமூகம்! – தமிழில் நாம எதையாவது அனுப்ப, மொபைலில்அது பொட்டி பொட்டியாத் தெரிய, அதைப் படிக்க முடியாம ஆட்கள் படும் பதட்டம் இருக்கே… க்யூட்! :) – கூட்டத்தோடு நகரும் பெண்ணொருத்தி சூடியிருக்கும் மல்லிகை வாசமாய் மழை வாசம் வந்து போனது மனம் போல் கொஞ்சம் நிலம் எங்கேனும் குளிர்ந்திருக்கும் – பதின் பருவத்திற்குள் மகள் காலடி எடுத்து வைத்தபின், ஆண்டு தோறும் மகளுக்கு ஒரு வயது கூடுகையில், தந்தைக்கு இரண்டு வயது கூடுகிறது. – குழந்தைக்கு வித்தியாசமான பேரு சொல்லுங்கனு கேக்குறதும், அப்படியே நாம சொன்னாலும் முதல்லையே முடிவு பண்ணின பேரையே வெச்சுடுறதும்தான் இப்ப ஃபேஷன் – அகால மரணம் குறித்து

கீச்சுகள் தொகுப்பு – 51

எழுதியது ஈரோடு கதிர்

குழந்தைகள் அழுதுகொண்டே எதாவது பேச வரும்பொழுது ”முதல்ல அழுகாம பேசு!” எனஅதட்டுவது அதிகாரத்தின் உச்சமா? அன்பின் எச்சமா!?

பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் விடுமுறையென்றால் அந்த நாளை எல்லோருக்குமானவிடுமுறை தினம் என்பது போலவே குடும்பம் கருதுகிறது!

எல்லாத் தாமதங்களுக்குப் பின்னாலும் காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக அந்தக்காரணங்கள் மிகப் பிடித்தமானதாகவும் இருக்கின்றன.

அன்பில் நிகழ்த்தப்படும் ஒரு வன்முறை “நான் எது செய்தாலும் நீ கோபப்படவே கூடாது!”

அடிமைப்பட்டிருப்பது குறித்து கிஞ்சித்தும் வெட்கமில்லை. ஆனால் அடிமைப்பட்டிருக்கேன்என ஒப்புக்கொள்ள மட்டும் அநியாயத்திற்குக் கூசுது!

வாட்ஸப்ல புத்திசாலித்தனமா ஆசைப்படுறது நம்ம Last seen தெரியக்கூடாது, ஆனால்மத்தவங்க Last seen தெரியனும் 🙂

யாராச்சும் செல்ஃபி போட்டால், அதை ’செல்ஃபி’னு கண்டுபிடிச்சு சொல்றதை ஆகச் சிறந்தகண்டுபிடிப்பா நம்ம சனம் நினைக்குது!

ஐஸ் பக்கெட் சேலஞ், ரைஸ் பக்கெட் சேலஞ் மாதிரி பாஸ்வேர்டு எடுத்துட்டு “Free WiFiசேலஞ்ச்” னு ஆரம்பிச்சா கொஞ்சம் புண்ணியமாப் போவும்!

துணிக்கடை ஆளுயரக் கண்ணாடியில் பூதாகரமாத் தெரிஞ்சவுடனே முடிவெடுத்துட்டேன், ”இனிமே கண்ணாடி வெச்சிருக்கிற துணிக்கடைப் பக்கம் போகக்கூடாது”னு!

பச்சைக் கலர்ல போர்டு வெச்சுட்டாவே அது ”இயற்கை அங்காடி” ஆயிடும்னு….. அவங்களும்நினைக்கிறாங்க, இவங்களும் நினைக்கிறாங்க!

ஆசைப்படுவது என்னவோ இரண்டங்குல நாக்குதான்… ஆனால் நாள் முழுக்க, ஏன் ஆயுள்முழுக்கவும் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பதென்னவோ வயிறுதான்! #தொப்பை

எவ்ளோ வயசானாலும் பிறந்த நாளில் வாழ்த்தும்போது கொஞ்சூண்டு வெட்கம் பூக்குமே,அதுமட்டுமே அவர்கள் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் குழந்தைத்தனம்!

கொடும் மரணங்கள் விதைத்துச் செல்லும் துக்க வித்தை அறுத்தெறிய தலைமுறைகள்போதாது.

என்ன ’வேலை’ செஞ்சா உடம்பு குறையுங்கிறதைவிட, என்ன ”சாப்பிட்டா” உடம்புகுறையும்னுதான் எல்லாருமே கேக்குறாங்க!

உடல் நலத்துக்கு தினமும் ’ஆப்பிள்’ சாப்பிடுறாங்களோ இல்லையோ, கையில ஒரு”ஆப்பிள் போன்” வச்சுக்கிறது அந்தஸ்த்துனு நினைக்குது சமூகம்!

தமிழில் நாம எதையாவது அனுப்ப, மொபைலில்அது பொட்டி பொட்டியாத் தெரிய, அதைப்படிக்க முடியாம ஆட்கள் படும் பதட்டம் இருக்கே… க்யூட்! 🙂

கூட்டத்தோடு நகரும் பெண்ணொருத்தி சூடியிருக்கும் மல்லிகை வாசமாய் மழை வாசம்வந்து போனது மனம் போல் கொஞ்சம் நிலம் எங்கேனும் குளிர்ந்திருக்கும்

பதின் பருவத்திற்குள் மகள் காலடி எடுத்து வைத்தபின், ஆண்டு தோறும் மகளுக்கு ஒருவயது கூடுகையில், தந்தைக்கு இரண்டு வயது கூடுகிறது.

குழந்தைக்கு வித்தியாசமான பேரு சொல்லுங்கனு கேக்குறதும், அப்படியே நாமசொன்னாலும் முதல்லையே முடிவு பண்ணின பேரையே வெச்சுடுறதும்தான் இப்ப ஃபேஷன்

அகால மரணம் குறித்து கேள்விப்படுகையில் எங்கே, எப்படி, என்ன வயசு எனக் கேட்பதுஒரு கணம் தன்னை அதில் பொருத்தி நிம்மதி அடைந்துகொள்ளவும்தான்!

Case in point this data sufficiency question from the official gmat guide if positive integer x is a multiple of 6 and positive integer y is a multiple of 14, is xy a multiple of 105
Author

kathir

Recent Posts