உதடுகளின் போர்க்களம்

எதைக்கொண்டும்
நிரப்பிட இயலுவதில்லை
முத்தம் பதிந்(த்)த சுவடு(க்)களை!

(..)

நெருப்பைத்
தூண்டிடும் முரண்
முத்த ஈரத்தில் மட்டுமே!

(..)

இறைவனும் வெட்கிக் கிறங்கி
இமை மூடுகிறான்
முத்தமிடும் கணங்களில்!

(..)

உமிழ்நீரும் அமுதமாய்
உருமாறும் இரசவாதம்
முத்தங்களில் மட்டுமே!

(..)

நெருப்பையும் குளிரையும்
உயிருக்குள் ஒரு சேர
ஏற்ற வல்லது ஒற்றை முத்தம்
(..)

வெற்றியும் தோல்வியுமில்லா
உதடுகளின் போர்க்களத்தில்
வெல்கிறது முத்தம்!

(..)

There had to be a wwii before there could be a purchase an essays wwi
Author

kathir

Recent Posts